இந்தியாவில் மவுசு பெறும் ராம்யுன் உணவு! - கொரிய தொடர்களின் விளைவு

 



பாய்ஸ் ஓவர் ஃபிளவர்ஸ் கொரிய தொடர்





இந்தியாவிற்குள் கொரிய தொடர்கள் ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம், காதலும் அதனை வண்ணமயமாக படமாக்கும் விதம்தான். டிவி தொடர் என்றாலும் கூட நிறைய செலவு செய்து அதனை எடுக்கிறார்கள். இவையெல்லாம்தான் ஆங்கிலம், இந்திய நிகழ்ச்சிகளின் மீது ஆர்வம் குறைந்து கொரிய தொடர்கள் பக்கம் மக்கள் செல்வதற்கு காரணமாக உள்ளது. கொரிய மற்றும் சீன தொடர்களில் முக்கியமான விஷயம், அவர்களின் உணவு கலாசாரம். தொடர்களில் சாப்பிடும் கிம்ச்சி, ராம்யுன், ஸ்டீக் போர்க், வறுத்த கோழி என அனைத்து விஷயங்களையும் இந்திய மக்கள் வாங்கி  சாப்பிடத் தொடங்கியுள்ளனர். 

சூப்பர் மார்க்கெட் முதல் ஹைப்பர் மார்க்கெட் வரை இவற்றை தேடி வாங்கி வருகின்றனர். 2021ஆம் ஆண்டு லாக்டௌனில்தான் சிம்ரன் டாண்டன் கொரிய தொடர்களை பார்க்க தொடங்கினார். அதுவும் கூட இந்திய மற்றும் ஆங்கிலத் தொடர்களில் சலிப்பு ஏற்பட்டுத்தான் ஓடிடி தளங்களை நாடினார். தொடர்களின் கதைகளும் கூடவே அதில் காட்டப்பட்ட உணவுகளும் அவரை ஈர்த்தன. கொரிய வறுத்த கோழி, கிம்ச்சி ஃபிரைட் ரைஸ், டம்ப்ளிங்க்ஸ், ட்டியோக் போக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிடவேண்டும் என்ற வெறியே அவருக்கு வந்துவிட்டது. தொடரில் உணவுக்கான முக்கியத்துவம் என்பது கதாபாத்திரங்கள் அதனை சாப்பிடத் தயார் செய்வதுதான் என்கிறார் டெல்லியைச் சேர்ந்த சிம்ரன். 

லாக்டௌன் காலத்தில் கே பாப், கே டிராமாக்களை இந்தியர்கள் ஓடிடி வழியாக நிறைய பார்க்கத் தொடங்கினர். இதற்கு என்ன காரணம், குறைந்த எபிசோடுகளில் தொடர் முடிந்துவிடும், அழகான திறமையான நடிகர்கள், கதை அமைப்பு என நிறைய விஷயங்கள் உள்ளன. இதைப் பார்க்கும் ரசிகர்கள் இப்போது அப்படியே கொரிய உணவகங்களை தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர். சிலர் சூப்பர் மார்க்கெட்டுகளில் பாக்கெட் உணவுகளாக கொரிய உணவுகளை வாங்கி சாப்பிடத்தொடங்கியுள்ளனர். 

2020 இல்  டல்கோனா காபி என்பது பிரபலமானது கூட கொரிய நடிகர் ஒருவரால்தான். சிம்ரன், கொரிய வலைப்பூ எழுதுபவர்களுடன் நட்பு கொண்டு அவர்களின் சமையல் நூல்களை வாங்கி வாசித்து வருகிறார். ட்டியோபோக்கியை தொடரின் நாயகன் தயாரித்து தனது அம்மாவுக்கு தருவார். எனவே அதனை செய்து பார்க்க முயன்றேன். ரைஸ் கேக்குகளை தயாரிக்க முயன்றேன். இதுவரை சரியாக வரவில்லை. இப்போது ரைஸ் பேப்பர் ரோல் மூலம் செய்து வருகிறேன் என்றார் சிம்ரன். 

கே டிராமாக்களை வாங்கி தனது தளத்தில் நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பி 370 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இலவச ஓடிடி தளமான எம்எக்ஸ் பிளேயர் மொழிபெயர்த்து வெளியிட்ட கொரிய தொடர்களும் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளன. 


முதலில் கொரிய தொடர்கள் வடகிழக்கு மாநிலங்களில்தான் பிரபலம் ஆகத் தொடங்கின. பிறகு பான் இந்தியா முழுவதும் மக்களால் விரும்பத்துக்குரியதாக மாறிவிட்டது. இப்போது இந்தியர்கள் கொரியாவுக்கு சுற்றுலா செல்வதும் அதிகரித்துள்ளது. கொரிய தொடர்களில் கப் நூடுல்ஸை சாப்பிடுவது, சோஜூவை குடிப்பது, பீர் குடிப்பது, பிளாக் பீன்ஸ் நூடுல்ஸ் சாப்பிடுவது, சுட்ட பன்றி இறைச்சியை சாப்பிடுவது என்பது இல்லாமல் கதைகள் நகருவது இல்லை. இந்தியாவில் உணவு மீதான ஆர்வம் எப்படியோ அப்படித்தான் கொரியாவிலும் நடக்கிறது. அங்கும் சிறந்த உணவுகள் எங்கே என அவர்கள் தேடிச்சென்று சாப்பிடுவார்கள்  என்றார் ஃபேஸ்புக்கில் கே டிராமா கிளம் பக்கத்தை நடத்தும் ஷெராப். இதில் சேரும் உறுப்பினர்கள் அனைவருமே கொரிய கலாசாரத்தை விரும்புபவர்கள்தான். இவர்கள் கொரிய உணவுகளை விற்கும் கடைகளை மதிப்பிடுகிறார்கள், சோஜூ, கொரிய உணவுகளை தயாரிப்பதற்கான பொருட்களை எங்கே வாங்கலாம் என தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த குழுவினரின் எண்ணிக்கை இப்போது 12 ஆயிரமாக உள்ளது. 

தென்கொரியாவைச் சேர்ந்த விலாக்கர் ஹைகியோங் கோவாவிற்கு பயணமாக வந்திருக்கிறார். வந்தவர், கோவிட் காரணமாக அங்கேயே தங்கவேண்டிய நிலை. அங்கேயே கிடைத்த பொருட்களை வைத்து கிம்ச்சி செய்து சாப்பிட்டார். அதனை செய்த விதத்தை அப்படியே படம் பிடித்து யூடியூபில் போட லட்சம் பேருக்கு மேல் அதனை பார்த்து லைக் போட்டுள்ளனர். பலரும் அதனை செய்யப்போவதாக கூறி அவரை பாராட்டியுள்ளனர். வரவேற்பைப் பார்த்தவர் கோஜூஜாங், ட்டியோபோக்கி, ஜப்சா நூடுல்ஸ் என ரவுண்டு கட்டி ரெசிப்பிகளை சமைத்து அதனை யூடியூப்பில் பதிவிடத் தொடங்கிவிட்டார். 

கொரிய உணவு பிராண்டான நாங்ஜிம் என்ற ராம்யுன் பிராண்டை இந்தியர்கள் வாங்கும் அளவு 88 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2020ஆம் ஆண்டு கணக்கு. கோரிகார்ட் என்பது கொரிய உணவுப்பொருட்களையும், அழகுசாதனப் பொருட்களையும் விற்கும் ஆன்லைன் தளம். ராம்யுன், சாக்கோ பைஸ், சில்லி சோயா பீன் பேஸ்ட் ஆகிய உணவுப்பொருட்கள் அதிகம் ஆர்டர் செய்து விற்கப்பட்டு வருவதாக கூறுகிறார். கொல்கத்தாவில் இயங்கும் கிங் பேக்கரி உரிமையாளர் சியோக் ஜியோங், தனது நண்பரைப் பார்க்க இந்தியாவுக்கு வந்தார். வந்தவர் இங்கு சரியான கொரிய உணவகங்கள் இல்லை என்பதால் அங்கேயே தங்கி உணவகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.கொரோனாவுக்குப் பிறகு பலரும் கொரிய உணவுகளை சாப்பிட அதிகம் விரும்புகின்றனர். டிவி தொடரில் பார்க்கும் உணவுகளை அவர்களே செய்து, சாப்பிட விரும்புகின்றனர் என்றார். உணவுப்பொருட்களுக்கான தனி கடையை விரைவில் சியோக் தொடங்கவிருக்கிறார். 

டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களிலும் உணவுப்பொருட்களை விற்கும் கடைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. மேகி, யிப்பி, டாப்ராமன் என சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்போது ராம்யுனுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். இது மணமாகவும், ஸ்பைசியாகவும், எளிமையான உணவுமாக இருக்கிறது. நான் மேகியை கைவிட்டு இப்படி ராம்யுனுக்கு மாறுவேன் என நினைத்தே பார்க்கவில்லை என்றார் கொரிய உணவு ரசிகரான சன்யா கோயல். 

கொரிய உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் கொரியர்கள், ஜப்பானியர்கள் என இருந்த நிலை மாறிவிட்டது. கொரிய தொடர்களை பார்க்கும் இருபது முதல் முப்பது வயதுக்குள் உள்ளவர்கள் அதிகம் கிம்ச்சி, ராம்யுன் என வெளுத்துக்கட்ட தொடங்கியுள்ளனர். மும்பையில் உள்ள பாம்புசா என்ற உணவகத்தில் 2017இல் 20 கிலோ விற்ற கிம்ச்சி இப்போது 500 கி.கி வாக அதிகரித்துள்ளது. 

சாப்பிடலாம் வாங்க!











 

TOI

sonam joshi



கருத்துகள்