அரசின் கல்வித்திட்டங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது! - பேராசிரியர் கிருஷ்ணகுமார்

 







பேராசிரியர் கிருஷ்ணகுமார்

கல்வியாளர்

டிஜிட்டல் கல்விமுறை என்பது கல்வி கற்பதை பெரும் பிரிவினைக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்?

பள்ளிகள் பெருந்தொற்று காரணமாக தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். நிலப்பரப்பு ரீதியாக எங்கு நோய்த்தொற்று அதிகம் பாதிக்கிறது என்பதை கண்டுபிடிக்கவேண்டும். கல்வி நிறுவனங்களை திறப்பது, மூடுவது என்பதை அரசு கூறக்கூடாது. அதனை ஊரக அளவில் உள்ள நிர்வாகத்தினர் நோயின் பெருக்கத்தைப் பொறுத்து தீர்மானித்துக்கொள்வதாக இருந்தால் நன்றாக இருக்கும். 

மதிய உணவு வழங்குவதிலும் இதேபோன்ற சூழல்தான் நிலவுகிறது. எதற்கு பள்ளிகளில் வழங்கும் உணவை தடுத்தார்கள் என்றே புரியவில்லை. சாதாரணமாக எடுக்கும் வகுப்புகளுக்கு மாற்றாக வரும் ஆன்லைன் கல்வி முறை மாணவர்களுக்கு பெரியளவில் மாற்றாக இருக்காது என்பது ஆசிரியர்களுக்கும் தெரியும். மாணவர்களுக்கு மேசைக்கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போன் என எதையும் கொடுக்காமல் எப்படி அவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வியை கற்றுத்தருவது? ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாத ஒன்றுதான். 

ஆன்லைனில் கல்வி கற்ற மாணவர்கள் இப்போது வகுப்பறை வழி கல்வியை மீண்டும் கற்க வேண்டும். ஆசிரியர்கள், இப்போதைய காலத்திற்கு ஏற்ப பாடங்களை தேர்ந்தெடுக்க சுதந்திரத்தை அளிக்க வேண்டும். அப்போதுதான் பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவும்படி இருக்கும். கேந்திரிய வித்யாலயாவில் வாரம்தோறும் பாடத்திட்டத்தை மாற்றியமைத்து கற்பித்து வருகிறார்கள். 

பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் படிப்பு, எழுத்து, அறிவுத்திறன் எல்லாம் பாதிக்கப்படும் என்கிறீர்களா?

நீங்கள் கூறும் திறனை மாணவர்கள் முழுமையாக பெற அவர்களுக்கு நீண்டகாலம் தேவை. சில ஆய்வுகளின் மூலம் உடனே இவற்றை ஆராய்ந்துவிட முடியாது. சில ஆசிரியர்கள் மட்டும்தான் மாணவர்கள் மீது ஆர்வம் காட்டி பாடங்களை நடத்துகின்றனர். கல்வித்துறை மொத்தமுமே மாணவர்களுக்கு இந்த சூழல் எப்படியிருக்கிறது என்பதைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கின்றனர். பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் உணர்ச்சிகரமான தன்மை, கல்வியில் பின்னடைவு , ஊட்டச்சத்தின்மை என பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஏழ்மையான பின்புலத்தைச்சேர்ந்த மாணவர்கள் பெருந்தொற்று காலகட்டத்தில் வேலைக்கு சென்றுவிட்டனர். திரும்ப பள்ளிக்கு வர வாய்ப்பு குறைவாக இருக்கிறது. இது எதிர்காலத்தில் சமூகத்தை எப்படி பாதிக்கும் என நினைக்கிறீர்கள். 

சர்வ சிக்ஷா அபியான், கட்டாய கல்வி உரிமைச்சட்டம் ஆகியவற்றால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் பின்னடைவைச் சந்தித்துள்ளது உண்மைதான். இதிலிருந்து மீள ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும். நிறைய நிதி முதலீடுகளை இத்துறையில் செய்யவேண்டும். 

இந்தி மொழி வட்டாரத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது. பிற மாநிலங்களிலும் இதே  பாதிப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இதுதொடர்பான ஆராய்ச்சி நடைபெற்றால் மட்டும்தான் பாதிப்பை முழுமையாக அறிய முடியும். 

ஃபிரன்ட்லைன்

திவ்யா திரிவேதி


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்