வேட்டையாடுதல் எனும் ஆதி உணர்வு- கடிதங்கள்

 






ஓநாய்குலச்சின்னம் தமிழில் சி.மோகன்


அன்புத்தோழர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். 

நன்றாக இருக்கிறீர்களா? நான் இப்போது எங்கள் இதழில் வெளியாகும் சிறப்பிதழுக்காக வேலை செய்து வருகிறேன். நெற்பயிருக்கான சிறப்பிதழ். உதவி ஆசிரியர்களை நிருபர்களாக மாற்ற நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. எப்படி சாத்தியமோ?

ஓநாய் குலச்சின்னம் நாவலைப் படித்து வருகிறேன். இன்னும் இருநூறு பக்கங்கள் மிச்சமுள்ளன. நாடோடியாக வாழும் மங்கோலியர்களின் வாழ்க்கைப்பதிவு இது. ஓநாய்கள் முக்கியான பாத்திரங்களாக வரும் வேட்டை இலக்கியம் இது. சி.மோகனின் அற்புதமாக மொழிபெயர்ப்பு காலம் கடந்தும் நிற்கும் என நினைக்கிறேன். 

2020 பெரும் போராட்டங்களுடன்தான் தொடங்குகிறது. விளைவு எப்படி இருக்குமோ? பொருட்களின் விலை ஏற்றம் மக்களின் மனதில் சொல்ல முடியாத கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஜல்லிக்கட்டு - ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கிய படம் பார்த்தேன். கறிக்கடைக்காக கட்டப்பட்டிருக்கும் மாடு ஒன்று தப்பித்துவிடுகிறது. காட்டின் உள்ளே ஓடிவிட அதனை வேட்டையாட மனிதர்கள் ஆவேசத்துடன் கிளம்புகிறார்கள். மாட்டை வேட்டையாடினார்களா இல்லையா என்பதுதான் கதை. வேட்டையாடுதல் என்ற விஷயத்துடன் மனித மனத்தின் பல பக்கங்களை இயக்குநர் திறந்து காட்ட முயன்றிருக்கிறார். 

நன்றி

ச.அன்பரசு

கருத்துகள்