ஹாங்காங் திரைப்பட விழாவில் திரையிடப்படும் சில படங்கள்!
டிரைவ் மை கார் |
ஹாங்காங் திரைப்பட விழாவில் இடம்பெறும் முக்கியமான படங்கள்
இந்த திரைப்படவிழாவில் ஏராளமான புதிய இளைஞர்கள், கருத்து, நடிகர்கள் இடம்பெற்ற திரைப்படங்களை எதிர்பார்க்கலாம். சில படங்களைப் பார்ப்போம்.
அனிதா |
அனிதா
2003ஆம் ஆண்டு புற்றுநோயால் இறந்துபோன அனிதா இம் முயி என்ற பாப் இசைக்கலைஞர் பற்றிய திரைப்படம் இது. லூயிஸ் வாங் அனிதாவாக நடிக்கிறார். இவர் மாடல் நடிகையாக புகழ்பெற்றவர். கவாஷிமோ யோஷிகோ, மிட்நைட் ஃபிளை என்ற இரு படங்களை திரைப்பட விழாவில் அனிதாவை நினைவுகூறும்வகையில் திரையிடுகிறார்கள்.
மடலேனா
எமிலி சான் என்கா என்ற இயக்குநரின் படம். இன்சோம்னியா பாதிப்பு கொண்ட டாக்சி ஓட்டுநர், வேலை செய்து தனியாக வாழும் குழந்தையைக் கொண்ட பெண் என இருவருக்குமான உறவும் சம்பவங்களும்தான் கதை. படம் முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.
ஃபார் ஃபார் அவே
ஹாங்காங் இயக்குநர் அமோஸ் எடுத்துள்ள படம் இது. டாட் 2 டாட் என்ற படம் எடுத்து புகழ்பெற்ற இயக்குநர் இவர். காகி சாம் என்ற ஐடி துறையில் வேலை செய்பவர்தான் நாயகன். அவர் செய்யும் காதல் கலாட்டாக்களில் ஐந்து பெண்கள் சிக்குகிறார்கள். சிக்கலான காதல் உறவுகளைப் பற்றி பேசுகிற படம் இது.
டிரைவ் மை கார்
கேன்ஸ் விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வாங்கியவர் படத்தின் இயக்குநர் ரைசுகே ஹமாகுசி. இந்த படத்திற்குத்தான் சிறந்த திரைக்கதை விருது வழங்கப்பட்டது. ஜப்பானிய நாவல் ஆசிரியர் ஹாருகி முரகாமியின் சிறுகதையை படமாக்கியுள்ளனர். நாடக இயக்குநர் ஒருவருக்கும், அவரது காரை ஓட்டும் பெண் ஓட்டுநருக்குமான உறவுதான் கதை.
மெமோரியா -தாய்லாந்து |
மெமோரியா
கொலம்பியாவில் வாழும் பெண், தனது தோழிகளைப் பார்ப்பதற்காக போகோடோவிற்கு வருகிறார். அங்கு வந்து அறையில் தூங்கி எழும்போது பூமியில் ஏற்படும் அதிர்வை கவனிக்கிறார். அதன் பின்னணியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. இயக்கம் அமித்சாட்பாங். தாய்லாந்து இயக்குநரான இவர், தங்கப்பனை விருது வென்றவர்.
இங்கு எழுதப்பட்டுள்ள படங்களின் டிரைலர்களைப் பார்க்க...
கருத்துகள்
கருத்துரையிடுக