மரபணுமாற்ற அரிசியால் மாட்டிக்கொண்ட இந்திய அரசு!

 






மரபணுமாற்ற பயிர்




அண்மையில் பிரான்சில் அரிசிமாவு வணிகர், இந்தியாவிலுருந்து நொய்யரிசி 500 டன்களை வாங்கியிருக்கிறார். அதில் மரபணுமாற்ற சமாச்சாரங்கள் இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. அந்த அரிசியை ஏற்றுமதி செய்தவர், மகாராஷ்டிராவை சேர்ந்த வணிகர் ஒருவர். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற பொருட்களை விற்பதற்கு பயன்படுத்த தடை உள்ளது. எனவே, இந்திய வணிகர் மரபணு மாற்ற பொருட்கள் இல்லை என்று சொல்லி அதற்கான சான்றிதழை வாங்கி இணைத்துத்தான் அனுப்பியிருக்கிறார். அப்படியிருந்தும் சோதனையில் மரபணுமாற்ற பொருட்கள் சிக்கியிருக்கின்றன. 

அரிசியை அரைத்து மாவாக்கி அதனை மிட்டாய், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பேக்கரி உணவுகளை தயராக்கின்றனர். 

இந்தியா அரிசி விற்பனையில் முன்னிலை வகிக்கும் நாடு. கடந்த ஆண்டு 18 டன்களுக்கு தானியங்களை விற்று 65 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது. இதில் வருமானம் பெற்றுத்தந்தது பாஸ்மதி அரிசிதான். இந்த அரிசியை மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்கள் நேபாளம், வங்கதேசம், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்கின்றன. 

2006ஆம்ஆண்டு அமெரிக்காவில் இருந்து அரிசி ரகங்களை ஜப்பான், ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். அப்போது பேயர் நிறுவனம் அரிசியில் மரபணு மாற்றப் பொருட்கள் இருப்பதாக கூறியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பேயர் நிறுவனம் 750 மில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க கோரினர். 

இதன் காரணமாக இந்தியா பாஸ்மதி விளையும் இடங்களில் மரபணுமாற்ற பொருட்களை சோதிக்க அனுமதியை வழங்கவில்லை. 

மரபணு மாற்ற அரிசி

இந்த வகையான அரிசியில் மரபணுக்களை செயற்கையாக மாற்றியிருப்பார்கள். இதனால் இந்த அரிசி, களைக்கொல்லி, பூச்சி மருந்தால் பாதிக்கப்படாது. பஞ்சத்தால் பாதிக்கப்படாமல் வளரும். அதிக விளைச்சலைக் கொடுக்கும். பிற பயிர்களை விட ஊட்டச்சத்துகளும் கூடுதலாக இருக்கும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தங்க அரிசி. மஞ்சள் நிற தாவரம், சோளம் ஆகியவற்றிலிருந்து மரபணுக்களை எடுத்து சேர்த்து வைட்டமின் ஏ சத்து அதிகம் இருக்கும்படி தங்க அரிசி உருவாக்கப்பட்டது. 

இந்தியாவில் மரபணுமாற்ற பருத்திக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் விரைவில் இருபது மரபணுமாற்ற பயிர்களுக்கான சோதனை நடைபெறவிருக்கிறது. இதில் உள்ள அரிசிவகைகள் பூச்சிமருந்து, மாறும் பருவச்சூழல் ஆகியவற்றை தாண்டி வளரும். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பேயர் உயிரி ஆராய்ச்சி நிறுவனம், மாஹைகோ ஆகியவை ஒன்றாக இணைந்து மரபணுமாற்ற பயிர்களை விளைவித்து ஆராய்ச்சி செய்யவிருக்கின்றன. 

புகார் வெளிநாட்டில் கிளம்பியவுடன் இந்திய அரசு, மரபணு மாற்றம் இந்தியாவில் நடைபெறவில்லை. அரிசியை அரைக்கும் இடத்தில் கூட கலப்படம் நடந்திருக்கலாம் என பதில் கூறியுள்ளது. மரபணுமாற்ற சோதனை நடக்கும் இடத்திலிருந்து பிற இடங்களுக்கும் கூட மரபணு வேதிப்பொருட்கள் பரவி இப்படி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். பிடி பருத்தி, கத்தரிக்காய் ஆகியவை இன்றும் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு விற்கப்பட்டு கொண்டிருக்கின்றன. 

இந்து ஆங்கிலம்

பிரிசில்லா ஜெபராஜ் 

கருத்துகள்