போலியான கோட்பாடுகளை மக்கள் நம்புவதற்கு காரணம் என்ன? - பதில் சொல்லுங்க ப்ரோ?
பதில் சொல்லுங்க ப்ரோ?
பெரும்பாலான மேப்கள் ஏன் தவறாக இருக்கின்றன?
பூமி உருண்டையாக இருக்கிறது. ஆனால் மேப் உள்ள தாளோ தட்டையாக இருக்கிறதே அதனால்தான். உள்ளபடியே சரியான தகவல் வேண்டுமென்றால் மேப் மிகப்பெரிதாக இருக்கவேண்டும். வரைபடத்தில் உலகத்தை எப்படி அடக்குவது என்றால் அதை சாதித்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர், ஜெரார்டஸ் மெர்கேடர். 1569இல் இவர் உருவாக்கிய முறையைத் தான் பலரும் பின்பற்றி வருகிறார்கள். இன்று கூகுள் மேப்பில் பார்க்கும் உலகைக் கூட மெர்கேடர் காட்டும் முறையைப் பின்பற்றித்தான் பார்க்கிறோம். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் பல்வேறு நாடுகளின் அளவு மிகப்பெரிதாகிவிடும். சில நாடுகள் மிக சிறியதாக சுருங்கிவிடும்.
மக்கள் ஏன் போலியான பல கோட்பாடுகளை நம்புகிறார்கள்?
கட்டடங்களை இடிப்பது எளிது. கட்டுவது கடினம். இதைப்போலவே வதந்திகளை உருவாக்குவது எளிது. அதனை உடைப்பது கடினம். நம்பிக்கை ஒருவரின் மனதில் உருவாகிறது என்றால் அதற்கு அடிப்படையாக உண்மை அல்லது பொய் இருக்கலாம். எதனை நீங்கள் நம்புகிறீர்களோ அதுதான் முக்கியம். முரட்டுத்தனமான புத்திசாலிகள் கோட்பாடுகளை உருவாக்குவதோடு அதனை பரப்பவும் செய்கின்றனர். பசி பட்டினி பட்டியலில் இந்தியா 101ஆவது இடத்தில் இருக்கிறது என்பது உண்மை. இதனை தேசபக்தி பைத்தியங்கள். மோடி ஒரு நாளுக்கு 25 மணிநேரம் உழைத்ததால் இந்த இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது என நம்மை ஊறவைத்து அடிப்பார்கள். இதை சமூக வலைத்தளங்களில் பகிர்வார்கள். இதற்கு நாம் என்ன செய்வது? இந்தளவு புத்திசாலியாக அவர்கள் புத்திசாலியாக அவர்கள் இருக்க அவர்களேதான் காரணம். இதனை தவறு என்று சொன்னால் உண்மை எதுவென நம்மை பிரம்பு அல்லது சூலாயுதம் எடுத்து நிரூபிப்பார்கள். உணர்ச்சிகரமான விஷயங்களுக்கு ஆதாரங்களை யாரும் கேட்பதில்லை. உண்மையைத்தான் நிரூபிக்கவேண்டும். ஆனால் பொய்யை நம்ப வைக்க குழப்பமே போதும் என சித்தார் அபிமன்யு பாத்திரம் பேசும். அதேதான் விஷயம்.
பிபிசி சயின்ஸ்போகஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக