பிராமணராக பிறந்ததுதான் வளர்ச்சிக்கு காரணம்! - இந்திரா நூயி முன்னாள் இயக்குநர், பெப்சி

 





இந்திரா நூயி 


இந்திரா நூயி

முன்னாள் இயக்குநர், பெப்சிகோ


மை லைஃப் இன் ஃபுல் - வொர்க் ஃபேமிலி அண்ட அவர் ஃப்யூச்சர் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இதில் பணி சார்ந்தும்,. சொந்த வாழ்க்கை சார்ந்தும் எடுத்த முடிவுகளை எழுதியுள்ளார். 

உங்கள் நூலில் மகளுக்கும் அம்மாவுக்கும் உள்ள சிக்கலான உறவை எழுதியிருக்கிறீர்களே?

அம்மாக்களைப் பொறுத்தவரை தான் பெற்ற மகள்தான் அவர்களுக்கு குத்துச்சண்டைக்கான மணல் நிரம்பிய மூட்டை. அதில்தான் குத்தி பயிற்சி செய்வார்கள். எனது அம்மாவும் அப்படித்தான். நாம் வேலை செய்துகொண்டிருக்கிறோம். பல்வேறு விஷயங்களை நாம் சமாளித்து வாழ வேண்டியிருக்கிறது. நீரில் வாத்து நீந்துவதைப் பார்த்திருப்பீர்கள். மேலே அழகாக நகர்ந்து போனாலும் நீருக்கு அடியில் கால்களால் நீரை உதைத்துத் தள்ளியே நகரும். வாழ்க்கையிலும் உறவுகள் இப்படித்தான் இருக்கும். நாம் சந்திக்கும் அத்தனை சவால்களையும் வெளியே கூறிவிட முடியாது. 

டோரிடோஸ் சிப்ஸ், கென்டல் ஜென்னர் விளம்பர சர்ச்சை பற்றி நூலிக் கூறப்படவில்லையே?

நீங்கள் சொன்ன விளம்பரத்தை எடுத்தது ஆப்ரோ அமெரிக்கர்தான். பெண்கள் பொதுவாக சிப்ஸ்களை சத்தம் போட்டு சாப்பிட மாட்டார்கள் என்பதை பாட்காஸ்ட் ஒன்றில் சொன்னேன். அதனை பெண் டோரிடோஸ் என்று அழைத்தனர். 90ஆயிரம் வார்த்தைகளுக்குள் அனைத்து விஷயங்களையும் கூறவேண்டும். என்னுடைய நூலை யாரும் படித்துவிட்டு பஸ்சிற்குள் போட்டு விடுவார்கள் என்று நம்பவில்லை. 

 பிராமணராக பிறந்தது அதிர்ஷ்டம் என்று கூறினீர்கள். ஏன் அப்படி?

அதுதான் என்னை உருவாக்கியது. எங்கேயும் செல்லக்கூடாது. பரதநாட்டியம் ஆடவேண்டும். கர்நாடக சங்கீத்தை படிக்கவேண்டும் என்ற கண்டிப்பு எங்கள் வீட்டில் இருந்தது. இப்படிப்பட்ட கட்டுப்பாடான சமூகத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். பிராமணர் என்றால் உடனே பலரும் மரியாதை கொடுப்பார்கள். ஏனெனில் எங்கள் சாதியினர் கற்றவர்கள் என்பதை அனைவருமே அறிந்திருந்தனர்.

இந்தியாவில் பெண்கள் வேலை செய்வது தனிப்பட்ட சவால்களைக் கொண்டதா?

பெண்களை பாதுகாக்கும் நிறைய சட்டங்களை அரசு கொண்டிருக்கிறது. காவல்துறையும் கூட இதற்கு ஒத்துழைக்கிறது. பெண்கள் அவர்களது கணவர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தால் அவர்களோடு சென்றுவிடுவார்கள். 

அனுபிரபாகர்

இந்தியா டுடே

படம் தினமலர்






கருத்துகள்