இடுகைகள்

ட்ராஃபிக் - கேரக்டர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ட்ராஃபிக் கேரக்டர்கள் - நீங்கள் தினசரி பார்ப்பவை

படம்
வண்டியில் ஜாலியாக போகிறீர்கள். வீர விக்ராந்த், அவெஞ்சர், கவாசாகி கூட ஓகே. ஆனால் குறுக்கே ஏவியேட்டரில் கட் அடிக்கும் ஸ்பைக் மண்டையர்கள், ஆக்டிவாவில் சைட் கட்டில் வரும் மயிலை மாமா, ரன்வேயில் டயர்களை மேலே தூக்காமல் செல்லும் விமானம் போல செல்லும் சுடிதார் சிங்காரிகள், சைக்கிளில் டிஸ்கவரியின் பியர் கிரில்ஸ் செய்யாத சாகசங்களை செய்யும் பையன்கள் என சென்னை ஒரு வேடிக்கை நகரம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் அப்படி பதிவு செய்த சில கேரக்டர்கள் உங்களுக்காக இன்னோவா எமன் உலகிலேயே மக்கள் அதிகம் பயப்படுவது ஜிஎஸ்டிக்குத்தான் என நினைப்பீர்கள். இன்னோவாவுக்கும் முக்கிய இடமுண்டு. சாலையில் கணிக்க முடியாதவை அரசு பஸ், தண்ணீர் லாரி, ஆட்டோ அதற்கடுத்த இடம் இன்னோவாவுக்குத்தான். இட்லி தின்ற அமர முதல்வருக்கு பிடித்த வாகனம் என்பதாலோ என்னவோ எந்த சிக்னலிலும் நிற்பதற்கு பிடிப்பதில்லை. வேகம்தான். இன்னோவா வருகிறது என்றாலே அனைவரும் உறைந்து நின்றுவிடுகிறார்கள். நான் கூட பிரசவ அவசரத்திற்குத்தான் ஓட்டுகிறார்கள் என வெகுளியாக நம்பியிருந்தேன். ஹார்ன் அடி ரூட்டைப் பிடி ஈரோட்டில் உள்ளூர்காரர்கள் டிரைவராக வேலை ப