இடுகைகள்

பைகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பச்சை குத்துதல், டாட்டூ வரைதலை நவீனமாக செய்யும் பழங்குடி மக்கள்!

படம்
  கோண்ட் பழங்குடிகள் கலைஞர் மங்களா பாய் ஒரு தொன்மை மொழி உள்ளது. அதை பேசும் மக்களில் ஒருவர் மிஞ்சினாலும் கூட அம்மொழி உயிரோடு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படித்தான் பச்சை குத்துதலை நரிக்குறவர்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறார்கள். முதலில் சைக்கிள் கம்பிகளை பச்சு குத்துவதற்கு ஏற்ப மாற்றியமைத்தவர்கள், இப்போது அதற்கென தனி கருவிகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள. இதற்கான மை தனித்துவமானது, பல்வேறு மூலிகைகளை கலந்து இதைச் செய்கிறார்கள். பழங்குடி மக்கள் இயற்கையான மையை பயன்படுத்துகிறார்கள். நகரங்களில் உள்ள டாட்டூ கலைஞர்கள் பெங்களூரு, கோவா ஆகிய பகுதிகளில் பச்சை குத்துவதற்கான செயற்கை மையை வாங்குகிறார்கள். இந்த மையை ஒருவர் பயன்படுத்தும்போது வரையப்படும் உருவங்கள் பச்சை நிறமாக மாறாது. தொன்மைக் காலத்தில் பச்சை குத்தியவர்களுக்கு, அந்த இடம் பச்சையாக மாறியது, மூலிகைகள் காரணமாகத்தான். பச்சை குத்துவதில் சுகாதாரம் முக்கியம். இதில் எளிதாக நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது.   நாகலாந்து பழங்குடிகள் பச்சை குத்துவதற்கு புகழ்பெற்றவர்கள். இவர்கள், இயற்கை சார்ந்த விஷயங்களை கவிதை போல சொல்வதற்கு புகழ்பெற்றவர்கள்