குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை!
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி உளவியல் ரீதியான ட்ராமா என்றால் என்ன? ஒருவரின் இளம் வயதில் உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்திருக்கலாம். இப்போது மூன்றாம் உலகப்போருக்கு உலகம் தயாராகி வருகிறது அல்லவா? அதுபோல...தீவிரவாதத்தால் குடும்ப உறுப்பினர்கள் இறப்பு,மோசமான கோர விபத்துகள், உதவிக்கு ஆட்கள் இன்மை, ஆகியவை ஒருவரை உளவியல் ரீதியாக பாதிக்கிறது. ஒருவருக்கு நேரடியாக நடக்கும் சம்பவங்கள் அல்லது மோசமான சம்பவங்களை காண்பதும் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக போர். போரால் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஈடுபடும் ராணுவ வீரர்களும் வாழ்நாள் முழுக்க மனநல குறைபாடுகளில் சிக்கி சிதைகிறார்கள். இதில் இயற்கை பேரிடர்களும் சேர்த்திதான். சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல் ஆகியவற்றையும் உளவியல் பாதிப்பு ஏற்படுத்துவனவற்றில் இணைக்கலாம். மோசமான சம்பவங்கள் பற்றி ஆராய்வது அவசியமா? தனிநபராக தேவையா என்றால் இல்லைதான். ஆனால், உளவியல் ஆய்வுக்காக அத்துறையில் ஆர்வம் காட்டுபவர்கள் வரலாற்றை தேடி உளவியல் ரீதியான பிரச்னை கொண்டவர்களை அடையாளம் காண்கிறார்கள். ...