இடுகைகள்

மரபணு மாற்று குழந்தைகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிசைனர் பேபி ரெடி!

மரபணுமாற்ற குழந்தைக்கு அனுமதி ! மரபணுக்களை மாற்றி குழந்தைகளை உருவாக்குவதற்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடக்கூடும் . இங்கிலாந்தைச் சேர்ந்த NCB(Nuffield Council on Bioethics) அமைப்பு மரபணுக்களை எடிட் செய்து டிசைனர் குழந்தைகள் உருவாக்குவது குறித்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது . அதில் மருத்துவ சிகிச்சைக்காக கருமுட்டையை மாற்ற அனுமதிக்கலாம் என என்சிபி பரிந்துரை செய்துள்ளது . மரபணு மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் பெரும்பாலும் அரசு அமைப்புகளின் கையில் உள்ளது என்பதால் கண்காணிப்பு பிரச்னை இதில் எழாது . ஆனால் என்சிபி அமைப்பை பிபிசி , மரபணு மாற்ற குழந்தைகளை உருவாக்குவதற்கான ஆதரவை திரட்டுகிறது என குற்றம்சாட்டியுள்ளது . பிறப்பு குறைபாடுகள் தொடர்பான நோய்களை குறைக்கவென மரபணுக்களை எடிட் செய்யும் ஆராய்ச்சிகள் செல்லும் திசை , குழந்தைகளை ஆர்டர் செய்து பெறும் நிலைமைக்கு வர அதிக காலம் தேவைப்படாது என்பதையே உணர்த்துகிறது .