டிசைனர் பேபி ரெடி!







மரபணுமாற்ற குழந்தைக்கு அனுமதி!

மரபணுக்களை மாற்றி குழந்தைகளை உருவாக்குவதற்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடக்கூடும். இங்கிலாந்தைச் சேர்ந்த NCB(Nuffield Council on Bioethics) அமைப்பு மரபணுக்களை எடிட் செய்து டிசைனர் குழந்தைகள் உருவாக்குவது குறித்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. அதில் மருத்துவ சிகிச்சைக்காக கருமுட்டையை மாற்ற அனுமதிக்கலாம் என என்சிபி பரிந்துரை செய்துள்ளது.

மரபணு மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் பெரும்பாலும் அரசு அமைப்புகளின் கையில் உள்ளது என்பதால் கண்காணிப்பு பிரச்னை இதில் எழாது. ஆனால் என்சிபி அமைப்பை பிபிசி, மரபணு மாற்ற குழந்தைகளை உருவாக்குவதற்கான ஆதரவை திரட்டுகிறது என குற்றம்சாட்டியுள்ளது. பிறப்பு குறைபாடுகள் தொடர்பான நோய்களை குறைக்கவென மரபணுக்களை எடிட் செய்யும் ஆராய்ச்சிகள் செல்லும் திசை, குழந்தைகளை ஆர்டர் செய்து பெறும் நிலைமைக்கு வர அதிக காலம் தேவைப்படாது என்பதையே உணர்த்துகிறது.