வங்கி விவரங்களை திரட்டும் ஃபேஸ்புக்!
ஃபேஸ்புக்கின் பரஸ்பர சகாயம்!
தகவல்கொள்ளைக்கு அடுத்த பரபரப்பாக வங்கிகளிடம் பயனர்களின்
வரவு செலவு விவரங்களை ஃபேஸ்புக் கேட்டுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது. ஜேபி மோர்கன் சேஸ், வெல்ஸ் ஃபார்கோ, சிட்டிகுழுமம் உள்ளிட்ட வங்கி நிறுவனங்களிடம் பயனர்களின்
குறைந்தபட்ச இருப்பு முதற்கொண்டு கிரடிட் கார்டு செலவு வரை ஃபேஸ்புக் தகவல்களை கோரியது
அம்பலமாகியுள்ளது.
பேபால் மற்றும் வெண்மோ நிறுவனங்கள் மொபைல் வணிகவட்டாரத்தில்
வலுவாக உள்ளதோடு விரைவில் இவை ஃபேஸ்புக்கோடும் இணைந்து செயல்புரியக்கூடும். ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் ஆப் பயனர்களுக்கும் வங்கிகளுக்கும் இடைமுகமாக செயல்படும்
வாய்ப்பும், வங்கிகளை விளம்பரப்படுத்தும் பரஸ்பர சகாயமும் இதில் உள்ளது."வங்கி மற்றும் கிரடிட் கார்டு கம்பெனிகளின் பயனர் பட்டியலை விளம்பரத்திற்காக நாங்கள்
பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. வேறுவகையான சிறப்பு உறவுகளும் கடைபிடிக்கவில்லை" என்கிறார் ஃபேஸ்புக்கைச்சேர்ந்த அதிகாரியான எலிசபெத் டயானா.