சூழலைக்கெடுக்கும் சுற்றுலா!
சுற்றுலா விதிகள்!
ஐரோப்பாவுக்கு சுற்றுலா வரும் 671 மில்லியன் பயணிகளால்
உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க அரசுகள் பல்வேறு விதிகளை உருவாக்கி
வருகின்றன.
பிரான்சின் பாரிசில் கடந்த ஏப்ரல் முதல் விதிகளை
அமுல்படுத்தாத Airbnp முதல் பல்வேறு தங்கும் வசதி ஏற்படுத்தி தரும் தளங்களின் மீது
அரச நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரில் சுற்றுலா
பயணிகள் மார்க்கெட் பகுதிகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையிட கட்டுப்பாடுகள்
அமுலாகியுள்ளன. இத்தாலியின் ரோம் நகரில் இரவு பத்து மணிக்கு மேல் மது அருந்த தடையும்,
அதிகாலை 2 மணிக்கு பிறகு மது விற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெனிஸ நகரில் நகரின்
மத்தியில் சுற்றுலா பயணிகள் குவிவதை தடுக்க தீவுகளுக்கு செல்வதை ஊக்குவிக்கிறார்கள்.
ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து ஐஸ்லாந்துக்கு வரும்
பயணிகளுக்கு சுற்றுலா வரி விதிக்க அங்குள்ள அரசு முடிவு செய்துள்ளது. குரோஷியா நாட்டின் டப்ரோவ்னிக் நகரில் சுற்றுலா
பயணிகளை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டும், ஒரு நாளுக்கு 8 ஆயிரம் சுற்றுலா
பயணிகள் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.