3டி துப்பாக்கி ரெடி!
அனைவருக்கும் 3டி துப்பாக்கி!
அமெரிக்காவின் சுதந்திர சமூகம் உலகிற்கு இதைவிட மோசம் செய்்துவிடமுடியாது. துப்பாக்கி, போதைப்பொருட்களுக்கு அடுத்து 3டி முறையில் எளிதில் மெட்டல் டிடெக்டர்களுக்கு டிமிக்கி கொடுக்கும் பிளாஸ்டிக் துப்பாக்கியை சட்டப்பூர்வமாகவே சந்தைக்கு கொண்டு வந்துவிட்டனர்.
உலகிலுள்ள அனைவரும் விரைவில் 3டி பிளாஸ்டிக் துப்பாக்கி டிசைனை தரவிறக்கி ஆயுதம் செய்யலாம்; அதுவும் சட்டப்பூர்வமாகவே. "பார்க்லாண்டு துப்பாக்கிச்சூடு நிகழ்வு
உள்ளிட்ட எதுவும் பிளாஸ்டிக் துப்பாக்கி(AR-15)யை மக்கள் பெறுவதை தடுக்க முடியாது" என்கிறார் 3டி துப்பாக்கியின் கர்த்தாவான கோடி வில்சன். இவர் 2013 ஆம் ஆண்டு உருவாக்கிய 3டி துப்பாக்கி, தண்ணீர் துப்பாக்கியை போன்ற வடிவில் இருந்தது. அமெரிக்க அரசு https://ghostgunner.net
தளத்தை தடுத்தாலும் 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து கடந்த ஜூனில் வில்சனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக என்று கூறி சட்டம் அனுமதித்தாலும்
விபரீத விளைவுகளை உருவாக்கும் என்ற அச்சம் 3டி துப்பாக்கி மூலம் ஏற்பட்டுள்ளது. 3டி டிசைனை வில்சனின் தளத்திலிருந்து
தரவிறக்கு 3டி பிரிண்டர் மூலமே துப்பாக்கியை பெறமுடியும். வில்சனுக்கு கோஸ்ட் கன்னர் எனும் கணினி மூலம் இயங்கும் பிரிண்டரை விற்பதன் மூலம்
கணிசமான லாபம் கிடைக்கிறது. துப்பாக்கி லேஅவுட்டை தரவிறக்கி தெர்மோபிளாஸ்டிக்கை
ஆன்லைனில் கூட வாங்கி இதனை தயாரிக்க முடியும். இதனை டிடெக்டர்கள் மூலம் எளிதாக கண்டறியவும் முடியாது என்பதால் மறைத்து எடுத்துசெல்வதும்
ஈஸி. அமெரிக்காவிலுள்ள எட்டு மாநிலங்கள் இதனை தடுக்க வழக்கு
தொடுக்கும் முன்னே ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி டிசைன்கள் தரவிறக்கமாகியுள்ளது
ஆபத்தின் அறிகுறி. இனி எதிர்த்து பேசினால் மர்டர் கன்ஃபார்ம்.