எலும்புகளின் அடர்த்தி குறைய என்ன காரணம்?






கால்சியத்தை கைப்பற்றுவோம்!



உலக ஆஸ்டியோபோரோசிஸ் பவுண்டேஷனின் வரைபடத்தில் கால்சியம் பற்றாக்குறையில் ஆசியாவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. ஆரோக்கிய உடல்நிலைக்கு தினசரி உணவில் 400 மி.கி கால்சியம் அவசியத்தேவை.


விட்டமின் டி உடம்பில் குறைந்தால் கால்சியம் சத்தை நம் உடல் கிரகிக்க முடியாது என்பது அடிப்படை. இதன் விளைவாக ரிக்கெட்ஸ் நோய் தோன்றி எலும்புகள் மென்மையாகி அடிக்கடி முறிந்துபோகும் அவலம் ஏற்படும். வளரிளம் பருவத்தில் எலும்புகள் உறுதியாக சரியான உணவு சூழல் அமையாதபோது 30 வயதில் எலும்புகளின் அடர்த்தி குறையும்போது பல்வேறு எலும்புக்குறைபாடுகள்(ஆஸ்டியோபோரோசிஸ் உட்பட) தோன்றும். கால்சியம், புரதம், விட்டமின் டி ஆகியவை எலும்புகளுக்கு அதிஅவசியத்தேவை. தேசிய ஊட்டச்சத்துக்கழகம் தினசரி உணவில் 600 மி.கி கால்சியத்தை உட்கொள்ள பரிந்துரைக்கிறது. மேற்குலகில் தினசரி ஆயிரம் மி.கி கால்சியத்தை(18-50 வயதினருக்கு) பரிந்துரைக்கிற நிலையில் இந்திய அரசு இதனை சீர்திருத்தவேண்டும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். 200 மி.லி பாலில் 240 கி. கால்சியம், நூறு கிராம் தயிரில் 83 மி.கி கால்சியம், நூறு கிராம் பனீரில் 500 மி.கி கால்சியம் உண்டு. சிறுதானியங்களிலும் கால்சியம் அபரிமிதமாக உண்டு என்பதால் வாரத்திற்கு ஒருமுறையேனும் அதனை பயன்படுத்தலாம்