முஸ்லீம் படுகொலையை தடுத்த காவலர்!
படுகொலையின் மீட்பர்!
கர்நாடகாவின் பிடார் பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் மல்லிகார்ஜூன், குழந்தை கடத்தல்காரர்கள் என தவறுதலாக கொல்லப்படவிருந்த ஐந்து அப்பாவிகளை 2,500 பேரிடமிருந்து காப்பாற்றி பாராட்டுகளை பெற்றுள்ளார்.
பிடார் பகுதிக்கு நண்பர்களுடன் தன் உறவினர்களை காணவந்த
முகமது ஆஸம் என்ற டெக் பணியாளர் அப்பகுதி குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்துக்கொண்டிருந்தார். உயிருக்கு வினையானதும் அதுதான்." எங்களை நோக்கி வந்த மூன்றுபேர் எங்களது
காரின் டயர்களை குத்தி பஞ்சராக்கியதோடு குழந்தை திருடர்கள் என்று பெருங்குரலில் அலற
மக்கள் கூட்டம் கூடி தாக்க முயன்றது. எங்களது மாமா தனது உறவினர்கள் என கூறிய
வாதத்தை யாரும் ஏற்கவில்லை" என்கிறார் உயிர்பிழைத்த அஃப்ரோஸ். "போலீஸ் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்தாலும்
நான்கு பேர் எப்படி 2 ஆயிரம் பேரை சமாளிப்பது என தடுமாறினர். எப்படியோ போராடி காரில் வந்தவர்களை உயிருடன் மீட்டுவிட்டனர்" என்கிறார் முர்கி பகுதியைச் சேர்ந்த கோவிந்த். மக்களின் மூர்க்கத்தனமாக கொலைவெறி தாக்குதலில் போலீசார்கள் சிலருக்கு காயமேற்பட்டது.