சென்னை சீக்ரெட்ஸ்! - நகராட்சி மேயர் பதவி
சென்னை சீக்ரெட்ஸ்!-பிகே
நகராட்சி மேயர்!
மெட்ராஸில்
1678ம் ஆண்டு
முதல்
வீட்டு வரி அமுலுக்கு
வந்தது. தமிழர்கள்
வாழ்ந்த பகுதியில் 75 வீடுகளும், வெள்ளையர் குடியேறியிருந்த பாகத்தில் 115
வீடுகளும் இருப்பதாகக் கணக்கிட்டு, வீடு ஒன்றுக்குக் காலணா முதல் ஒரு பணம் வரை வரி
விதிக்க முடிவானது. இதை
எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்ய தொடங்கினர். முதலில் பயந்த ஆட்சியாளர்கள்
அத்திட்டத்தை சிறிது காலம் கழித்து நடைமுறைப்படுத்தினர்.
.
அங்கீகாரம்
பெற்ற மதுக்கடைகளுக்கான ஓராண்டுக்கான உரிமம் 205 பகோடாக்கள் எனக்
கட்டணம் வசூலித்தனர். ஆனாலும், நகராண்மைச் செலவுகளுக்கு வரிப்பணம்
போதவில்லை.
மக்கள்தொகையும்
உயர,
லண்டனிலுள்ள
தலைமையகத்துக்கு சென்னை ஆளுநர் கடிதம் எழுதினார். பதிலுக்கு
கம்பெனியின் இயக்குநர்கள், ‘‘வரி சம்பாத்தியத்தை கைவிடக்கூடாது’’
என
அறிவுறுத்தினர்.
உடனே கம்பெனியின்
மேலாளர்கள் மெட்ராஸ்பட்டிணம் ஒரு மாநகராட்சியாக அறிவிக்கப்பட வேண்டுமென
முடிவெடுத்தனர். 1687ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் நாள் மெட்ராஸ் நகருக்கான
மேயரும்,
நகர்மன்ற
உறுப்பினர்களையும் உருவாக்க ஆளுநரும், கிழக்கிந்திய
கம்பெனியின் வணிகர்களும் சேர்ந்து சாசனம் வெளியிட்டனர்.
அதன்படி, ‘‘மக்கள்தொகை
அதிகமுள்ள நகர்களுக்கு அந்த நகர்களை நிர்வகிக்க மாநகராட்சி அமைப்புகள் தேவையென
நினைக்கிறோம். சிறு பிரச்னைக்கெல்லாம் ராணுவச் சட்டம் ெகாண்டு தீர்வு காண இயலாது.
கவலை தரும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி பத்து
மைல் தூரம் வியாபித்துள்ள இந்நகருக்கு மேயர், நகர்மன்ற
உறுப்பினர்கள் மற்றும் நகரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தினர்கள்
அடங்கிய ஒரு மன்றத்தை அமைக்க முடிவெடுத்துள்ளோம்’’.
பிறகு, 1688ம் ஆண்டு
செப்டம்பர் 29ம் தேதி அப்போதைய கவர்னர் எலிஹு யேல் ஆட்சியில் முதல் நகராட்சி
பிறந்தது. கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவரான சர் ஜோசையா
சைல்டு இம்மாற்றங்களின்
பிரம்மா. டச்சுக்
கிழக்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வந்த நகராட்சி முறையை இதற்கு முன்மாதிரி.
ஒரு
மேயர்,
12
நகர் உறுப்பினர்கள், 60 நகர அங்கத்தினர்கள் நியமிக்கப்பட்டனர்.
மேயராக நத்தானியேல் ஹிக்கின்சன் முதல்மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.