பருமனைக் குறைக்குமா பலூன் தெரபி?
பருமனைத்தீர்க்க பலூன் தெரபி!
சாலட், பிரெஞ்சு ஃபிரை, சீஸ் என நொறுங்க தின்றதின் விளைவாக உலகெங்கும் 1.9 பில்லியன் இளைஞர்கள் உடல்பருமன் பிரச்னையால் தவித்துவருவதாக உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) 2016 ஆம் ஆண்டு அறிக்கை தகவல் கூறுகிறது.
ஆபரேஷன் இன்றி உடல்பருமனை தீர்க்க மருத்துவர் சாந்தனு
கௌர் எலிப்ஸ் தெரபி எனும் சிகிச்சையை உருவாக்கியுள்ளார். இச்சிகிச்சை தொழில்நுட்பத்தின் மூலம் சாந்தனுவின் அல்லுரியன் டெக்னாலஜிஸ் 27 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது. எப்டிஏ அங்கீகாரம் பெற்ற இச்சிகிச்சையில் உடல்பருமன் நோயாளிகளுக்கு மாத்திரை அளிக்கப்பட்டு, வயிற்றில் பலூனாக மாறுகிறது. 14 ஆயிரம் டாலர்களிலிருந்து 23 ஆயிரம் டாலர்கள் வரை உடல்பருமன் கொண்டவர்களுக்கு அறுவைசிகிச்சை செலவு என்பதோடு
வயிற்றில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பின்விளைவுகளும் ஏற்படுவது உடல்பருமனுக்கான மாற்றுவழிகளை
தேடவைத்துள்ளது. பலூன் தெரபியில் நீர் நிரப்பிய பலூன்
வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தி உணவுசாப்பிடும் ஆசையை கைவிடச் செய்கிறது. "எங்களது ஐடியாவை தவறு, கிறுக்குத்தனம் என சிலர் கூறினாலும் ஆய்வு மூலம் நிரூபிப்போம். பரிசோதனைகள் முடிந்து 2020 ஆம் ஆண்டில் பலூன்கள் சந்தையில் கிடைக்கும்." என தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் சாந்தனு கௌர்.