யானைகளை காப்பாற்றும் மனிதர்!






யானை வீரன்!

மலேசிய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய டென்சிங், வண்டி ஓட்டவும், எந்திரங்களை பழுதுபார்த்து பழகியதோடு ஆங்கில பேச்சையும் நன்கு கிரகித்துக்கொண்டார். 2006 ஆம் ஆண்டு தாயின் அழைப்பின் பேரில் அசாம் திரும்பிய டென்சிங், வனவிலங்குகளை பாதிக்காதவகையில்  இன்று 52 ஏக்கரில் தேயிலைத்தோட்டத்தை அமைத்துள்ளார். அமெரிக்காவின் மோன்டனா பல்கலைக்கழகம், வனவிலங்கு நட்பு தொழிலக இணைப்பகம்(WFEN) ஆகியவை டென்சிங்கின் இரு டீ தோட்டங்களுக்கு உலகின் முதல் யானைகளுக்கு இசைவான தேயிலைத்தோட்டம் என்று அங்கீகரித்துள்ளன. டென்சிங் தனது தேயிலைத்தோட்டத்திற்கு வேலியிடாமல் யானைகளை தோட்டத்தின் வழியே நடந்து செல்ல அனுமதித்துள்ளார். செடிகள் இதனால் நசுங்கினாலும் பெரிய இழப்பில்லை.


"தேயிலைத்தோட்டம் அமைக்கும் முன்பு யானைகள் இவ்வழியாக இயல்பாக நடந்துவரும். அதன் வாழிடத்தை அழித்ததற்கு நாம்தான் வெட்கப்படவேண்டும்" என எதார்த்தமாக பேசுகிறார் டென்சிங். யானைகள் சாப்பிடவென தேயிலைத் தோட்ட ஓரத்தில் மூங்கில்களையும் வளர்க்கிறார் இவர். அசாமில் கடந்தாண்டு மட்டும் 48 யானைகள் ரயில்விபத்து மற்றும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளன. இதோடு யானைகள் மூலமாக 35 மனிதர்களும் பலியாகியுள்ளனர் என்பது சூழலியலாளர் முபினா அக்தர். கடந்த 75 ஆண்டுகளில் ஆசிய யானைகள் காடழிப்பாலும் விபத்துகளாலும் படுகொலைகளாலும் 50% குறைந்து இன்று மிஞ்சியிருப்பவை 40 ஆயிரம்-50 ஆயிரம்தான். "இயற்கையிடமிருந்து நிலம்,நீர்,காற்று என அனைத்தையும ்பெறுகிறோம். இயற்கைக்கு திருப்பிசெய்யும் மரியாதை அதனை சிதைக்காமல் இருப்பதுதான்" என்கிறார் டென்சிங்