உலக ஆரோக்கிய திட்டங்கள்!
ஆரோக்கிய திட்டங்கள்!
இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத்
போல அரசு மருத்துவத் திட்டங்கள் உலகம் முழுக்க உண்டு.
இங்கிலாந்து
வரி செலுத்தும் மக்களுக்கு
சிகிச்சை, ஆலோசனைக்கட்டணம் அனைத்தும் அரசின் பொறுப்பு.
தேசிய ஆரோக்கியத்திட்டத்தின் கீழ் மக்களின் உடல்நலன் பராமரிக்கப்படுகிறது.
கனடா
அரசின் நிதியுதவியோடு மருத்துவ சிகிச்சைகளை தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு
அளிக்கின்றனர். அடிப்படையான மருத்துவ
உதவிகளை மட்டும் தனியார் மருத்துவர்கள் மக்களுக்கு வழங்குகின்றனர்.
பிரான்ஸ்
பிரான்ஸ் அரசின் கட்டாய காப்பீட்டுத்திட்டம்
அனைத்து மக்களுக்கும் உண்டு. அதிலிருந்து
ஆலோசனை, சிகிச்சை ஆகியவற்றுக்கு மக்கள் செலவழிக்கும் 80
சதவிகித தொகையை அரசு திருப்பித் தந்துவிடுகிறது.
சிங்கப்பூர்
அரசின் தேசிய ஆரோக்கியத்திட்டம்
மக்களை நோய்களிலிருந்து காக்கவும் சிகிச்சை செலவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மானிய உதவிகளையும் சிங்கப்பூர் அரசு வழங்குகிறது.
ஜப்பானும் இதே மாடலோடு காப்பீட்டை கட்டாயமாக்கி சிகிச்சை செலவுகளை கட்டுப்படுத்தியுள்ளது.