வின்னர் விராட்! - கோலியின் ரன் மெஷின் ஸ்டோரி





Image result for virat kohli illustration

கிரிக்கெட் மாஸ் மகாராஜா

Image result for virat kohli illustration




ஒரு கிரிக்கெட் வீரரின் பத்து ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? ஜூனியர் உலக கோப்பை கேப்டனாக விளையாடியவர் இன்று தேசிய அணியில் ஆண்டுக்கு எட்டு கோடிக்கு மேல் சம்பளத்தை கேட்டுப் பெறுகிறார் என்றால் அது விராட் கோலியால் மட்டுமே சாத்தியம். கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி விராட் கோலி வெற்றிகரமான பிஸினஸ் பிராண்டாகவும் மாறியிருக்கிறார்.

Image result for virat kohli illustration





உணர்ச்சிகர எரிமலை!

நடுத்தரவர்க்க பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து தன் 29 வயதில் சொகுசு பங்களாவில் வசிக்கும் விராட், தன் வேர்களை தில்லியின் ராஜூரி கார்டனில் வாழ்ந்த வீட்டில்தான் கொண்டிருக்கிறார். திலீப் வெங்சர்க்காரால் தேசிய அணிக்கு தேர்வான விராட்டுக்கு பயிற்சி அளித்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராஜ்குமார் சர்மா. கிரவுண்டுக்குள் நுழைந்துவிட்டால் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்கி பவுலர்களின் நம்பிக்கையை பொசுக்கி சேசிங்கில் வெல்பவர், எதற்கும் அஞ்சுபவரல்ல. ஸ்லெட்ஜிங்கா? முதல் ஆளாக வெடிப்பவர், அண்மையில் தென் ஆப்பிரிக்கா தொடரிலும் 25% சதவிகிதம் அபராதம் கட்டி தகுதியிழப்பு புள்ளியையும் பெற்றுள்ளார் 

"கிரிக்கெட் போட்டிகளில் எதிரெதிர் அணிகளில் விளையாடுவது மனிதர்கள். இதில் உணர்ச்சிகள் வெளிப்படத்தானே செய்யும்? உணர்ச்சிகளே காட்டாமல் விளையாட நாமெல்லாம் ரோபாட்கள் இல்லையே!" என வெளியில் எதையும் லைட்டாக எடுத்துக்கொள்பவர், மைதானத்தில் இறங்கிவிட்டால் மேட்சை வின்னிங் இன்னிங்க்ஸ் ஆக்குவதில் விராட்டுக்கு நிகர் விராட்தான்.

Image result for virat kohli illustration



சச்சினை மறக்கவைத்த ரசிகன்!

 சிக்ஸ், ஃபோர் அடிக்காமல் ஒன்று, இரண்டு ரன்கள் என எடுத்து அதிக சதம் தொட்டு கிரிக்கெட்டை ரசிகர்களுக்கான தலைவாழை விருந்தாக்கியது விராட்டின் ஸ்பெஷல் சாதனை.

முதலில் சச்சினை கிரிக்கெட் கடவுளாக கொண்டாடியவர்கள் இன்று அவர் வாழும் காலத்திலேயே விராட் கோலியின் ரன்வேகத்தை பேசவைத்ததற்கு ஒரே காரணம், அணியின் சுமையை பொறுப்போடு சுமந்து ஆக்ரோஷமாக வெல்லும் விராட்டின் தீரம்தான். தன் மனவேகத்திற்கேற்ப அணி வீரர்களையும் போர் வீரர்களாக அணிவகுக்க வைத்து எதிரணியோடு போர் புரிந்து வென்றேயாக வேண்டும் என்ற தீவிர மனநிலையில் விளையாடுவது விராட்டின் வெற்றி ரகசியம்.

Image result for virat kohli illustration



வின்னர் விராட்!

விராட்டின் வெற்றியைக் கொண்டாடும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் அவரின் கட்டுக்கடங்காத ஆக்ரோஷ மனநிலையை தயக்கத்தோடு குறிப்பிடுகின்றனர். ஆனால் தொடர்ச்சியான பரபர வெற்றிகளும், ஓங்கும் ரசிகர்களின் உற்சாக குரல்களும் எதிர்க்குரல்களை நம் காதில் கேட்கவிடுவதில்லை. "ஆக்ரோஷ சண்டைகள்,வாக்குவாதங்கள் விளையாட்டில் சகஜம். அப்படி இருந்தால்தான் விளையாட்டு சூடுபிடிக்கும்" என்பதே விராட்டின் சிம்பிள் பதில்.    
ஒருநாள் போட்டிகளில் 35 சதங்களை வெளுத்திருப்பவர், இதில் 21 சதங்களை சேசிங்கில் ரன் வேட்டையாடி பெற்றிருக்கிறார் என்பது சாதாரணமல்ல. 1970-80 களில் விவியன் ரிச்சர்ட்ஸ் இடம்பெற்றிருந்த மேற்கிந்திய அணியின் வலிமையை இன்று இந்திய அணி பெற்றிருக்கிறது என்றால் அதற்கான முழுப்பெருமையும் கேப்டனும், ஆக்ரோஷ ஆட்டக்காரருமான விராட்டை மட்டுமே சேரும்

"சில சமயங்களில் எனது ஆட்டத்தை விராட் நினைவுபடுத்தினாலும், நான் விளையாடிய காலத்தில்கூட இவ்வளவு சிறப்பாக விளையாடியதில்லை" என மேற்கிந்திய அணியின் தங்கமகன் விவியன் ரிச்சர்ட்ஸை பேசவைத்த பெருமை விராட்டை மட்டுமே சேரும்.

ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி20 என எதுவென்றாலும் ரன்கள் தேவை என அக்கறை காட்டிய விராட் கோலி இம்மூன்று வகை போட்டிகளிலும் சராசரி 50 வைத்துள்ள ஒரே வீரர்

தனது ஃபேவரிட் ஷாட்டான ஃபிளிக் முதல் புல்ஓவர்வரை விளையாடி பவுலருக்கு பீதி ஏற்படுத்திய விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களைத் தொட இன்னும் 412 ரன்கள் மட்டுமே தேவை.
2008 ஆம் ஆண்டு பத்தொன்பது வயதுக்குட்பட்ட அணியின் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதிலிருந்து கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. அதன்பின் ஆகஸ்ட் 2008 ஆம் ஆண்டு இலங்கையோடு மோதிய போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததோடு கோலி அடித்த ரன்கள் பனிரெண்டுதான். விமர்சனங்களுக்கு பதிலை கோலி சொல்லவில்லை; அவரின் எம்ஆர்எஃப் பேட் பேசியது.

 கங்குலியை டால்மியா தேர்ந்தெடுத்தார்: தோனியை பாராட்டி சீராட்டி சீனிவாசன் வளர்த்தெடுத்தார்; ஆனால் விராட்கோலி தன் பொறுப்பான தீப்பிடிக்கும் ஆட்டத்தால் தன்னைத்தானே பல்வேறு பொறுப்புகளுக்கு தகுதிப்படுத்திக் கொண்டார். பத்திரிகைகளுக்கு ஆக்ரோஷமான பதிலடிகளை கொடுத்து வந்தவர், அனுஷ்கா சர்மாவுடன் நட்பதிகாரத்தை தொடங்கியபின் பேச்சுகளில் நிதானத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினார். ஆஸ்திரேலிய தொடரின் தோல்விக்கு காதலியை குற்றம்சாட்டியபோதும், அதனை மறுத்தவர் பின் தன் திறனை எல்லைக்கோட்டை பறந்து சென்று கடந்த பந்துகளின் மூலமே நிரூபித்தார்.

2011 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய விராட்டின் சராசரி 22.44. ஆனால் இன்று தவறுகளை திருத்தி நுணுக்கங்களை சேர்த்ததால் கடந்தாண்டில் மட்டும் 1,056 ரன்கள் அடித்துள்ளார். "2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிப்பதில் விராட் தடுமாறினார். இன்று அவருக்கு எப்படி பந்துகளை வீசுவதென பவுலர்கள் தடுமாறுகிறார்கள். அதுதான் விராட்டின் உழைப்புக்கு சாம்பிள்" என்கிறார் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா.

Image result for virat kohli illustration




ஆக்ரோஷ வீரன்!

2016-17 ஆம் ஆண்டின் சிறந்த கேப்டன், சிறந்த ஆட்டக்காரர், சிறந்த ஒருநாள் ஆட்டநாயகன் என விருதுகளை அள்ளிய விராட் நூறு அடித்தால் இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 90 என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. விராட்டை விட அதிக சராசரி 62.49% எடுத்து முதலிடம் பெற்றிருப்பவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே. அடுத்தடுத்த இடங்களில் ஜோ ரூட்(இங்கிலாந்து), கேன் வில்லியம்சன்(நியூசிலாந்து) உள்ளனர். கிரிக்கெட் மட்டுமல்ல எஃப்சி கோவா கால்பந்து அணியை வாங்கியுள்ளவருக்கு தனி ஆடை பிராண்டும் உண்டு. 20 பிராண்டுகளுக்கு விளம்பரத்தூதராக உள்ள விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 1,450 கோடி ரூபாய். விளையாட்டோ, பிஸினஸோ எதிலும் விராட் கோலி தனக்கு தேவையானதை விரட்டிப் பிடிக்கும் சேசிங் மாஸ்டர் என்பதை அவரின் உழைப்பு இன்றுவரைக்கும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. 

குறையொன்று உண்டு!

ஒவ்வொரு மேட்சிலும் உழைப்பை கொட்டி தன்னை நிரூபிப்பதில் விராட்டுக்கு இணையாக இன்று கிரிக்கெட்டில் யாருமில்லை. ஆனால் அதேசமயம் நண்பர்களை நம்பி திறமைசாலிகளை தள்ளிவைக்கும் குணம் விராட்டுக்கு உண்டு. உள்நாட்டில் போட்டிகளை எப்படியோ சமாளித்தாலும் வெளிநாட்டில் ஜொலிப்பது விராட்டின் வேகம் மட்டுமே. கிரிக்கெட் குழு விளையாட்டு என்பதை அவரின் சக வீரர்கள் சாரி நண்பர்கள் மறந்துதொலைப்பதை ரசிகர்கள் நிச்சயம் மன்னிக்கப்போவதில்லை. தற்போது நடைபெறும் இங்கிலாந்து தொடரிலும் வீரர்களின் தேர்வு நண்பர்களின் ஜமாவாக மாறியதன் விளைவை உலகமே விமர்சித்து வருவது விராட்டின் மனதில் பதிந்ததா என்பது அவருக்கே வெளிச்சம்.    


தூள் கிளப்பும் ஆட்டம்!

Flick
விராட்டின் அற்புத மணிக்கட்டின் சுழற்சியில் மூலம் உருவான ட்ரேட்மார்க் ஷாட். முன்னாள் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பயிற்சியில் இந்த ஷாட்டை அடிக்கவேண்டாம் என விராட்டை வற்புறுத்துவது வழக்கம்.

Coverdrive
முட்டி போட்டு ஓவர் பிட்ச் பந்துகளை பவுண்டரிக்கு வெளுத்துக்கட்ட விராட் இந்த ஷாட்டை பயன்படுத்துகிறார். இதில் ரசிகர்கள் பலருக்கும் பளிச்சென சச்சினை நினைவூட்டுகிறார் விராட். 


Squarecut

ஆப் ஸ்டம்புகளுக்கு மேலே செல்லும் பந்துகளை விராட் இம்முறையில் சந்திக்கிறார். பின்புற கால்களை பயன்படுத்தி பந்தை லேட்டாக சந்தித்து விராட் அடிக்கும் ஷாட் நிச்சய ரன்களுக்கு கேரண்டி.  

Inside-outshot
ஸ்பின்னர்களை சமாளித்து வேகமாக ரன்சேர்க்க விராட் பயன்படுத்தும் ஷாட் இது. இதே ஷாட்டை சூப்பராக ஆடும் மற்றொரு வீரர், சுரேஷ் ரெய்னா.

Pullshot
ஷார்ட்பிட்ச் பந்துகளை சமாளிக்க பின்புற கால்களை நகர்த்தி ஆடும் ஆக்ரோஷ ஷாட் இது. ஆஸ்திரேலியாவின் பாண்டிங்கின் ஸ்பெஷல் ஷாட்டும் கூட.  

வின்னிங் விராட்!

ஒருநாள் போட்டிகள் - 208(9,588 ரன்கள்) சராசரி (58.10)
டெஸ்ட் போட்டிகள் - 66(5,554 ரன்கள்), சராசரி (53.40)
டி20                 - 57(1,983 ரன்கள்), சராசரி (50.84)

(கட்டுரை ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக எழுதப்பட்டதால் ரன்களின் எண்ணிக்கை மாறுபடும்)

நன்றி: வீக் இதழ் 
.அன்பரசு

பிரபலமான இடுகைகள்