தனி இசையமைப்பாளர் சூழல் மாறிவிட்டது!







 தற்போது வெளிவந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபீசை நிரப்பி வரும் கோல்டு படத்தின் இசையமைப்பாளர் இணை சச்சின்-ஜிகார். படங்களுக்கு தனியாக பாடல்களுக்கு இசையமைப்பதோடு பல்வேறு படங்களுக்கு பின்னணி இசையமைத்தும் தம்மை நிரூபித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், பிரிதம் ஆகியோரின் இசைக்குழுவுக்கு ஆர்கனைசராக இருந்து இசையமைப்பாளர்களாக முன்னேறியவர்கள்.


Related image



நீங்கள் உருவாக்கிய பல்வேறு சிறந்த பாடல்களை இயக்குநர்கள் ராஜ் டிகே, ரெமோ டி சூசா ஆகியோரின் கூட்டணியில் உருவாக்கியிருக்கிறீர்கள். எப்படி நடந்தது இந்த மேஜிக்?

பாடல்களை சுதந்திரமாக உருவாக்குவதற்கு இவர்கள் இருவரும் எங்களை நம்புகிறார்கள் என்பதே முக்கிய காரணம். ரெமோ நடன இயக்குநர் என்பதால் ஏபிசிடி படத்தில்  பாடல்களை எனர்ஜியுடன் உருவாக்கினோம். சோர் இன் தி சிட்டி படத்திலிருந்து ராஜ் டிகேயுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

அப்படியென்றால் பாடல் சிறப்பாக உருவாகி வர இயக்குநரும், இசையமைப்பாளரும் இசைவான மனதை கொண்டிருக்கவேண்டும் இல்லையா?

மன்மர்சியான் பட ஆல்பம் நன்றாக வந்திருக்கிறது என்றால் அதற்கு படத்தின் இயக்குநரும், இசையமைப்பாளர் அமித் திரிவேதியின் நட்பும், பழக்கமும் முக்கிய காரணம். சுதந்திரமாக கருத்துக்களை சொல்லி பாடலை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஆடியோ சந்தையும் மாறி வருகிறது. மணிரத்னம், சுபாய் கைய் காலத்தில் பாடல்கள் கேசட், சிடி வடிவில் விற்றது என்றால் இன்று இணையம் அந்த இடத்தில் உள்ளது. பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடலை வாங்கி படத்தை புரமோட் செய்ய முயற்சிக்கிறார். தனி இசையமைப்பாளரை பாடலுக்கு நம்பும் காலம் கடந்துவிட்டது.

Image result for sachin jigar images




படத்தின் பின்னணி இசையை எப்படி உருவாக்குகிறீர்கள்? அதாவது, படத்தின் வீடியோ சற்றும் பொருந்தாத நிலையில் எப்படி பின்னணி இசையை வடிவமைக்கிறீர்கள்.

படத்தின் வீடியோ சிலசமயம் இயக்குநரின் கையைவிட்டு போய்விட்ட நிலையில் சூழலை புரிந்துகொண்டு அமைக்கும் பின்னணி இசை படத்தை காப்பாற்றும். ஆனால் ரொமான்டிக் சீனில் இசையின் பருப்பு வேகாது. அப்போது பாடல் வரிகளை பயன்படுத்தி சமாளிப்போம். அவ்வளவேதான்.


குஜராத் இசையில் நீங்கள்(சச்சின்) புகழ்பெற்ற பாடகர். ஆனால் இந்திப்படங்களில் ஏன் அதிகம் உங்கள் பாடல்களை பார்க்க முடிவதில்லையே?


காலத்திற்கேற்ப குரல் பொருந்திப்போகிறதா என்பது முக்கியமான ஒன்று. முன்பு பாடகர் கிஷோரின் நமக்கு பிடித்தது. பின்னர் குமார் சானு, கேகே  குரல் வசீகரித்தது. சிறந்த ஆண்மைத்தன்மை நிறைந்த குரல்கள் . இன்று இளைஞர்களுக்கு எரிக் கிளாப்டன், ஜஸ்டின் பைபர் ஆகியோரின் குரல்களுக்கான யுகம். எனது குரல் இச்சூழலுக்கு பொருந்தி வராது என்பதை புரிந்துகொண்டிருக்கிறேன்.  பூமி படத்தின் Kho diya பாடலை பாடகருக்கு கூறுவதற்காக பாடியதை பார்த்து, தயாரிப்பாளரே நீங்களே இப்பாடலை பாடுங்கள் என்று கூறிவிட்டார். அப்பாடலுக்கு என்குரல் ஒத்து வந்தது என்பதால் அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.

பல்வேறு பாடல்களில் சாரங்கியை பயன்படுத்தியிருக்கிறீர்களே? சாரங்கி மிகப்பிடித்த இசைக்கருவியா?

சாரங்கி, கிடார், புல்லாங்குழல்.


பல்வேறு இசையமைப்பாளர்களுக்கு இசை ஒருங்கிணைப்பாளராக அனுபவம் பெற்று உள்ளீர்கள். ஆனாலும் உங்களுக்கான பெயர் சொல்லும் பாடலை இன்னும் உருவாக்கவில்லையே?

கோ கோவா கான், ஏபிசிடி பட ஆல்பங்கள் பலராலும் பாராட்டப்பட்ட பாடல்களை கொண்டிருந்தன. பட்லாபூர் படத்திற்கு பிறகு அதேபடத்தைப் போன்ற படங்கள் பின்தொடர்ந்தன. நாங்கள் அப்படங்களை ஏற்கவில்லை. நாங்கள் தொடர்ச்சியாக இசை மூலம் மக்களை ஆச்சரியப்படுத்த விரும்புகிறோம்.

நீங்கள் பல்வேறு படங்களில் வேலை செய்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் வேட்கையுடன் வேலை செய்ய ஆசைப்படம் படம் எது?

சஞ்சய் லீலா பன்சாலி போன்ற இயக்குநரின் வரலாற்று படம்தான் லட்சியம். வெளிப்படையாக கூறவேண்டுமென்றால், புதிய இயக்குநர்களிடம் பணியாற்றவே விரும்புகிறோம். அப்போதுதான் புதிது புதிதான பரிசோதனைகளை அவர்களின் ஐடியாவிற்கு ஏற்ப செய்ய முடியும். எனவே புதிய இயக்குநர்களை வரவேற்கிறோம்.

தமிழில்: ச.அன்பரசு
நன்றி: scroll.in