வெளிப்புற வெப்பத்தை குறைக்கும் கிராபீன் டிரெஸ்!
கிராபீன் உடை!
ஒரே ஒரு அணுவைக் கொண்ட கிராஃபீனைப்
பயன்படுத்தி வோல்பேக் நிறுவனம் உடை தயாரித்து அசத்தியுள்ளது. 2004 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்களால் கார்பனை
நீக்கி கண்டறியப்பட்ட நெகிழ்வான, மின் கடத்தும் தன்மை கொண்ட பொருள்.
உடலிலுள்ள வெப்பத்தை குளிர்ந்த
பாகங்களுக்கும் கடத்தும் தன்மை கொண்ட கிராபீன், உடையாக அணிவது புதுமையான அனுபவத்தை தரக்கூடும்.
வியர்வையை எளிதில் ஆவியாக்கும் இந்த உடையில் வாட்டர்ப்ரூஃப் உண்டு.
"எங்களது ஆராய்ச்சிக்குழு செய்த ஆராய்ச்சியில் கிராபீனை பயன்படுத்தி
உடையை தயாரித்துள்ளோம். நடைமுறையில் இதனை பயன்படுத்துவது அதிகரிக்கும்
வாய்ப்புண்டு" என்கிறார் துணை நிறுவனரான நிக் டிட்பால்.
695 டாலர்கள் விலைகொண்ட இந்த உடையை காலை ஜாக்கிங்குக்கு கூட அணிந்து
சென்று புதிய கண்டுபிடிப்பின் சுகத்தை உணரலாம்.