உதடுகளை பயன்படுத்தி என்ன செய்யலாம்?




Image result for lips




உதடுகளே சாவி!


Image result for Lyd waterbottle



பயணமே லட்சியமாய் வண்டியில் போய்க்கொண்டிருக்க டேஷ் போர்டில் உருளும் தண்ணீர்பாட்டிலை எடுத்து குடிக்கத்தோன்றும். முகத்திலும், உடையிலும் நீர் சிந்த எப்படி குடிப்பீர்கள்? அதற்காகத்தான் Lyd நிறுவனம் உதடுகள் வைத்தால் பாட்டில் திறக்கும் வகையில் தண்ணீர் பாட்டிலை சென்சார் பிளஸ் பேட்டரி சக்தியுடன் தயாரித்துள்ளது. தம்ஸ்அப் ஸ்டைலில் ஒற்றைக் கையில் பிடித்து நீர் அருந்தலாம். ஒரு துளி நீர் கார் சீட்களில் சிந்தாது.

இனி பயணிக்கும்போது, ஜாக்கிங் போகும்போது வேகத்தை குறைக்காமல் நீர் பருகி பிறரை மலைக்க வைக்கலாம். உதடுகள் ஒட்டும்வரை பாட்டில் திறந்து நீர்வரும். உதடுகளை அகற்றினால் அடுத்தநொடி பாட்டில் சென்சார் உதவியுடன் அலிபாபா குகையாய் மூடிக்கொள்ளும். 503 மி.லி மற்றும் 384 மி.லி அளவில் ஸ்டீலில் 79 டாலர்களுக்கு நவம்பர் முதல் சந்தையில் வாங்கலாம்.

பிரபலமான இடுகைகள்