வடகொரியாவில் காணாமல் போன அமெரிக்கர்கள்!






காணாமல் போன அமெரிக்கர்கள்!



அமெரிக்க அரசின் செயலாளர் மைக் பாம்பியோ, கொரியா போரில் காணாமல் போன 5 ஆயிரத்து 300 வீரர்களை விரைவில் வடகொரியா அரசுடன் இணைந்து தேடவிருக்கிறது. 1996 ஆம் ஆண்டு வீரர்களை தேடும் திட்டம் செயல்படத்தொடங்கி 2005 ஆம் ஆண்டு அணுஆயுத பிரச்னையால் கைவிடப்பட்டது.

"இருநாட்டு அரசுகளின் ஒப்பந்தப்படி கூட்டுறவு முறையில் தேடுதல் நடைபெறும்" என செயலர் பாம்பியோ கூறியுள்ளார். "ஏறத்தாழ வடகொரியாவில் ஒன்பது மாதங்களாக எந்த ஏவுகணை சோதனைகளும் நடைபெறவில்லை. இது போலிச்செய்தியல்ல" என ட்விட்டரில் எழுதியுள்ளார் அதிபர் ட்ரம்ப். சிங்கப்பூரில் நடந்த சந்திப்பு குறித்து இருதலைவர்களும் நல்லவிதமாகவே கருத்து தெரிவித்துள்ளனர். வீரர்கள் உயிரோடு கிடைப்பது சந்தேகம் என்றாலும் எவ்வகையிலேனும் இருநாடுகளும் ஒற்றுமையாவது உலகிற்கு நல்லது.