காவல்துறை பலியாகும் அவலம்!




Image result for brazil police brutality


பலியாகும் காவல்துறையினர்!


கடந்த ஜனவரியிலிருந்து இன்றுவரை பிரேசிலில் காவல்துறையினர் கொல்லப்படுவது 39 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் 895 பேர்  தாக்கப்பட்டு இறந்துள்ளனர்.

குற்றங்களை தடுக்க போலீஸ் செல்லும் ரெய்டுகள் தொடர்ச்சியாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆறுமாதங்களுக்கு முன்பாக பிரேஸில் அதிபர் ரியோ டி ஜெனிரியோ நகரை பாதுகாப்பு காரணம் சொல்லி ராணுவத்திடம் ஒப்படைத்தார். ராணுவத்தினரின் மூர்க்கமான வன்முறை நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை குலைத்துவிட்டதே நிஜம்

தற்காப்பை காரணம் சொல்லி ராணுவம் பல்வேறு ரெய்டுகளிலும் மக்களை கொன்றுகுவித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டில் 645 மக்கள் உட்பட கடந்த பத்தாண்டுகளில் 8 ஆயிரம் மக்கள் போலீசாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு போலீஸ் சொல்லும் காரணம், ஆயுதக்குழுக்களை ஒழிக்கும் முயற்சியில் தற்காப்புக்காக தாக்கினோம் என்ற மாறாத பதில்தான். ஆனால் ஆயுதம் இல்லாத மக்களும் இதில் கொல்லப்படுவது முக்கிய பிரச்னை என மனித உரிமை கண்காணிப்பகம் இப்பிரச்னையை ஆவணப்படுத்தி உலகளவிலான கவன ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.