இந்தியாவில் பசுமைப்பரப்பு!
இந்தியாவில் பசுமைப்பரப்பு!
2001-2017 காலகட்டத்தில் உலகெங்கும் 337 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்பு(mha) அழிந்துள்ளன. இழப்பு சதவிகிதம் 4%. இதில் இந்தியா 1.54(mha) பரப்பை இழந்துள்ளது இழப்பின் அளவு 4%.
உலகின் வனப்பரப்பில் 2 சதவிகிதத்தைக் இந்தியா கொண்டுள்ளது. இதில் ரஷ்யாவின் வனப்பரப்பு 20% ஆகும்.(2015 தகவல்படி)
இந்திய நகரங்களிலேயே கொல்கத்தா(0.54%) மிக குறைவான வனப்பரப்பைக் கொண்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவுகள்(93.3%) பெருமளவு வனப்பரப்பைக் கொண்டுள்ளது. பழங்குடிகளிடம் 2.7% வனப்பரப்பு மிச்சமுள்ளது. உலகளவில் இதன் அளவு 12.5%.
ஹைதராபாத்தில் 2000-2017 காலகட்டத்தில் பசுமைப்பரப்பை 13% இழந்துள்ளது. வேகமான பசுமையிழப்பு ஏற்பட்டுவரும் நகரங்களில் இதுவே முதலிடம் பெறுகிறது.