ப்ரெஞ்ச் ஃபிரை புகழ்பெற்றது எப்போது?
பிட்ஸ்!
ஆஸ்திரியாவிலுள்ள
பூங்கா ஒன்று, பிற மாதங்களில் சாதாரணமாக இருக்கும் ஆனால்., வெயில் காலத்தில்
மட்டும் நீர் சூழ்ந்து ஏரியாக(Green lake) மாறிவிடுகிறது.
முதலாம் உலகப்போர்
காலகட்டத்தில்,
இங்கிலாந்து
சார்பாக பெல்ஜியத்தில் தங்கி போராடிய அமெரிக்கர்களிடையே ப்ரெஞ்ச் ஃபிரை எனும் உருளைக்கிழங்கு
சிப்ஸ் பிரபலமானது.
அமெரிக்காவின்
கலிஃபோர்னியாவிலுள்ள லிவர்மோர் ஸ்டேஷனில் மின்விளக்கு 1901 ஆம் ஆண்டிலிருந்து
இடைவெளியின்றி வெளிச்சம் தந்து வருகிறது. 1976 ஆம் ஆண்டில் 22 நிமிடங்கள் அணைக்கப்பட்டதை
தவிர இவ்விளக்கு இன்றுவரையும் வெளிச்சம் தந்து வருகிறது.
நிறைய நூல்களை
வேட்கையுடன் வாங்கி அலமாரியில் அடுக்கும் பழக்கத்திற்கு ஜப்பானிய மொழியில் Tsundoku என்று பெயர்.
ஸ்பெயின் சர்வாதிகாரியான
ஃபிரான்சிஸ்கோ ஃபிரான்கோவுக்கு விசுவாசமாக இருந்த மருத்துவர்களின் குழு, ஃபிரான்கோவுக்கு
எதிரான ஏழையான பெற்றோர்களின் 3 லட்சம் குழந்தைகளை திருடி ஃபிரான்கோவுக்கு
நெருக்கமான குடும்பங்களுக்கு கொடுத்துவிட்டார்கள்.