இடுகைகள்

குற்றவுணர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாலை விபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன்!

படம்
      எலா செப்பனு - தருண், ஷிரியா       எலா செப்பனு தருண் , ஷிரியா சரண் ஜெர்மனி , இந்தியாவில் ஆந்திரம் என இரு நாடுகளில் பயணிக்கிற கதை . தற்செயலாக நடைபெறும் விபத்தால் நாயகி மணம் செய்துகொள்ளப்போகும் அவளது காதலன் இறந்துபோக , நாயகன் காதலனின் இழப்பை எப்படி ஈடுகட்டுகிறான் என்பதே கதை . இறந்துபோனவர் நடத்தும் தொழில் , குடும்பம் , சமூகம் என அனைத்து இடங்களிலும் தன்னை நாயகன் பொருத்திக்கொண்டு சாப விமோசனம் தேடுகிறார் . இந்த நேரத்தில் தன்னால் வாழ்க்கை இழந்த நாயகியையும் சந்தித்து , அடையாளம் மறைத்து அவரைத் தேற்றுகிறார் . தொழிலை மேலே மீட்டு கொண்டுவருகிறார் . இந்த நேரத்தில் அவர் மெல்ல நாயகியை காதலிக்கத் தொடங்குகிறார் . நாயகியும் அப்படித்தான் . இவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா , நாயகன் பற்றிய உண்மை நாயகிக்கு தெரிந்ததா , காவல்துறை அதிகாரி நாயகனின் தற்செயல் விபத்துக்காக அவரை கைது செய்தாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி . படத்தில் ஷிரியா சரணுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது . ஆனால் அவரோ எங்கோ பராக்கு பார்ப்பது போல நிற்கிறார் . ஒரு நிறுவனத்தை தனது காதலனோடு சேர்ந்து நடத்தியவர

பத்து வளையங்களின் சக்தி கொண்ட அப்பாவை எதிர்க்கும் மகன்! சாங் சி- மார்வெல்

படம்
  சாங் சி மார்வெல் அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் வரும் வாடிக்கையாளர்களின் கார்களை பார்க்கிங் செய்து வரும் வேலையை நாயகனும் நாயகியும் செய்து வருகிறார்கள். இதில் நாயகனுக்கு கடந்த காலம் ஒன்றுண்டு. அதனை அவன் தனது தோழி பிளஸ் காதலியிடமும் சொல்லவில்லை. பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது நடைபெறும் மோதல், அவனை யாரென்று காதலிக்கு புரிய வைக்கிறது. நாயகனின் கழுத்தில் உள்ள டாலரை மட்டும் அந்த கும்பல் பிடிங்கிக்கொண்டு செல்கிறது. அதனைத் திரும்ப பெறுவதோடு, தனது தங்கையையும் காப்பாற்ற சாங் சி சீனா செல்கிறான். அங்கு என்ன நடந்தது? தங்கையின் உயிருக்கு வந்த ஆபத்தை தவிர்க்க முடிந்ததா? கொள்ளையடித்த கும்பலின் நோக்கம் என்ன என்பதுதான் கதை.  ஆசிய கலாசாரம், குடும்ப உறவு என ஹாலிவுட் திரும்பிவிட்டது படத்தில் தெரிகிறது. படம் நெடுக குடும்ப உறவுகள், கலாசாரம், தனது வேர் என்ன என்பதை நோக்கியே படம் செல்லுகிறது.  சாங் சியின் அப்பா, சாங் சியின் காதலியிடம் அவளது குடும்பம் மற்றும் சீனப் பெயரைக் கேட்கும் காட்சி இதற்கு உதாரணம். பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சி பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுதான் கதைக்கான முக்கியமான திருப்புமுனை.

சீரியல் கொலைகாரர்கள் புத்தகம் எழுதுவது இதற்காகத்தான்!

படம்
  குற்றவுணர்ச்சி  சீரியல் கொலைகார ர்கள் பற்றி நிறைய பேசிவிட்டோம். இப்போது குற்றவுணர்ச்சி பற்றி கேட்டால் என்ன சொல்வது? குற்றவுணர்ச்சி என்பதெல்லாம் அவர்களின் மூளையில் தேய்ந்துபோயிருக்கும். காவல்துறையில் பிடிபட்டு தூக்கு தண்டனை கொடுக்கும்போது மட்டுமே இனிமேல் கொலைகள் செய்ய முடியாது என கர்த்தரே, பாலாஜி, அல்லா என அலறுவார்கள். ஆனால் சாட்சிகள் கான்க்ரீட்டாக இருந்தால் என்ன செய்வது? உறுதியாக சாவுதான்.  மன்னிப்பு கூட கேட்கமாட்டார்களா என்றால் அதுவும் கூட கிடையாதுதான். அவர்கள் மன்னிப்பு கேட்பதே இன்னும் கொடூரமாக இருக்கும். உங்கள் மகள் இறக்கும்போது வலியாலும், பயத்தாலும் கத்தியது எனக்கு வேடிக்கையாக இருந்தது என சொல்லி மன்னிப்பு கேட்பார்கள். இதனை நீங்கள் மன்னிப்பாக ஏற்பீர்களா? குற்றங்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விடுவார்கள். அந்தளவில் சிறைக்கு சென்றாலும் கூட நான்தான் அதனை செய்தேன் என்று ஏற்கமாட்டார்கள். அதனை கடவுள் வந்து கட்டளையாக செய்யச் சொன்னார் என புருடா விட்டு எரிச்சலை கிளப்புவார்கள். இதெல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பேசுவதுதான்.  புத்தக எழு

கொலைகாரர்களிடம் குற்றவுணர்ச்சி இருக்குமா?

படம்
  கொலைக்கு முன்னும் பின்னும் கொலை செய்தபிறகு சீரியல் கொலைகார ர்கள் அதை நினைத்து வருந்துவார்கள். அவர்களின் உடல் எடை குறையும். ஜேக் டேனியலை சரண்டைவார்கள் என மென்மையான விக்ரமன் பட பார்வையாளர்கள் நினைப்பார்கள். உண்மை அப்படியல்ல. கஃபே ஃபிரெஷ்ஷில் ஃபிரெஞ்சு ஃபிரை ஆர்டர் செய்து கோக்கை சுவைத்தபடி சாப்பிடுவார்கள்.  கொலைக்கு முன்னிருந்த ஆவேசமும் இப்போது இருக்காது. அமைதியாக காணப்படுவார்கள். மற்றபடி ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போய் எம்எக்ஸ் பிளேயரில் வெப் சீரிஸ் பார்ப்பது, குழந்தைகளோடு விளையாடுவது என்பது போலத்தான் சீரியல் கொலைகாரர்களின் வாழ்க்கை இருக்கும். பெரிதாக கொலையை நினைத்து வருத்தமெல்லாம் படமாட்டார்கள். முதல் இரண்டு கொலைகளுக்கு சற்று பதற்றமான சூழலில் அவர்களின் உடல்மொழி இருக்கும். பிறகு இயல்பான நிலைக்கு மாறிவிடுவார்கள்.  ஆதாரங்களை அழிக்கும் முயற்சி குற்றங்களை பிறர் பார்க்கும் வரை செய்யவேயில்லை என்று சாதிப்பவர்கள்தான் இங்கு அதிகம். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை கொலைகளை செய்தாலும் கூட அவர்கள் தங்களை அங்கிருந்து தப்பிக்க வைக்கும் விஷயங்களை செய்வார்கள்.  கைரேகைகளை அழிப்பார்கள், தங்களது பொருட்க

காதலும் குற்றவுணர்ச்சியுமாக அலைக்கழிக்கப்படுபவனின் வாழ்க்கை! - பாடிகார்டு - கொரிய திரைப்படம்

படம்
                  பாடிகார்டு கொரிய திரைப்படம் கொரிய நிறுவனம் ஒன்றை கேங்ஸ்டர் ஒருவர் கைப்பற்ற நினைக்கிறார் . இதற்காக அந்த குழுமத்தைச் சேர்ந்த ஒரே பெண்ணையும் கொல்ல நினைக்கிறார் . அவர் தப்பித்து ஓட அவருக்கு பெயர்தெரியாத இளைஞ ர் அடைக்கலம் கொடுக்கிறார் . அவர் உண்மையில் யார் , அந்த பெண்ணை கேங்ஸ்டர் தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை . வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் நண்பர்களின் உதவியுட் வாழும் இளைஞர்தான் நாயகன் . இவர் பாடிகார்டாக முதலில் வேலை செய்தவர்தான் . ஆனால் இறந்தகால சம்பவங்களால் மனம் வெறுத்து வேலையிலிருந்து விலகியவர் , மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் . அந்த பழைய நினைவுகளை நினைத்துக்கொண்டு கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறார் . பழைய விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்துவது போல மீண்டும் ஒரு பெண் அவரை நோக்கி ஓடி வருகிறார் . அவரைக் கொல்ல இருவர் துரத்தி வருகிறார்கள் . அவர்களிடமிருந்து அந்தப் பெண்ணை காப்பாற்றுகிறார் . அந்தப்பெண் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வசதியானவளாக இருந்தாலும் காலில் செருப்பு கூட இல்லை . தான் பாதுகாப்பாக சில நாட்கள் தங்கவேண்டுமென கூறியதால்