இடுகைகள்

வாட்ஸ்அப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உக்ரைனில் உருவாக்கப்பட்ட முழுக்கியமான மென்பொருள் சேவைகள்!

படம்
  இப்போது இந்தியாவில் உள்ள தேசிய ஊடகங்களில் முக்கியமான விவாதம், உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் மருத்துவ மாணவர்கள்தான். இத்தனை பேர் ஏன் அங்கே போனார்கள் என இப்போதுதான் தூங்கி எழுந்தது போல உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவில் அரசு மருத்துவக்கல்லூரி இடங்களுக்கான போட்டி அதிகம். அதில் போட்டியிட முடியாதவர்கள், தனியார் கல்லூரியில் பணம் கட்டி படிக்க முடியாத சூழல். இங்குதான் முக்கியமான விஷயம் உள்ளது. இந்த சவாலான சூழலுக்காக அவர்கள், கனவை கைவிடவில்லை. உக்ரைன் சென்று படித்து வருகிறார்கள். உக்ரைன் மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்ல, டெக் முன்னேற்றங்களுக்கும் புகழ்பெற்றது. அங்கு உருவான முக்கியமான அப்ளிகேஷன்களை இப்போது பார்ப்போம்.  வாட்ஸ்அப் இப்போது மெட்டாவோடு சேர்ந்துவிட்டது. தொடக்கத்தில் இதனைத் தொடங்கிய ஜான் கூம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பிறந்தவர். ஃபாஸ்டிவ் நகரில் வளர்ந்துள்ளார். பிறகுதான் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு தனது அம்மா, பாட்டியுடன் இடம்பெயர்ந்திருக்கிறார். அப்படி இடம்பெயர்ந்தபோது அவரின் வயது 16.  பேபால் பணத்தை இணையம் வழியாக கட்டும் நிறு

உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல்வழிச்செய்திகள்!

படம்
  உணர்வுகளைச் சொல்லும் குரல்வழிச்செய்தி!   இன்று பெரும்பாலும் குறுஞ்செய்திகளை எழுதி அனுப்புவதை விடகுரல் வழியே செய்தி அனுப்புவதே புகழ்பெற்றுள்ளது. பொதுமுடக்கம் பலரையும் வெளியிடங்களில்  சந்திப்பதைத் தடுத்திருக்கிறது. இதன் காரணமாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்களில் கூட குரல்வழிச் செய்திகள் அதிகம் அனுப்பப்படுகின்றன.  2013ஆம் ஆண்டு  இந்த வசதி வா்ட்ஸ்அப்பில் நடைமுறைக்கு வந்தாலும், புகழ்பெற்றது பொதுமுடக்க காலகட்டத்தில்தான்.  இன்று போனில் வரும் அழைப்பே, மிகவும் அவசரம் என்றால் மட்டும்தான் என்பதாக மாறியிருக்கிறது. புதிய தலைமுறையினர் பெரும்பாலும் குரல்வழிச் செய்தியை உரையாட அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் அப்படி என்ன சிறப்பு?  ஒருவர் தன்னுடைய குரலில் தான் நினைப்பதை நண்பரிடம் பகிர்ந்துகொள்ளலாம். ஒருவர் வேண்டும்போது இந்த செய்தியைக் கேட்டுக்கொள்ளலாம். உடனடியாக பதில் சொல்ல வேண்டியதில்லை. மேலும், ஒருவர் தனது குரல் வழியாக பிறரிடம் பேசும்போது நேரடியாக பேசுவது போன்ற நெருக்கம் உருவாகிறது.  எதையும் படிக்க அவசியமில்லாமல் காதில் கேட்டுக்கொண்டு செய்தியை அறிந்துகொள்ளலாம். பதில் அளிக்க விரும்பினால் கூட அந்த நேரத்

வாட்ஸ்அப் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை விலக்கிக்கொள்ளுமா?

படம்
          பாதுகாப்பு விதிகளுக்கு கெடு ! பேஸ்புக் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான வாட்ஸ் அப் புதிய தகவல் கொள்கையை உருவாக்கியுள்ளது . இதனை பயனர்கள் ஏற்றுக்கொள்வதற்கு மே 15 ஆம் தேதியை கெடுவாக விதித்தது . இதற்கு பயந்து பலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த இதனை ஏற்காதவர்களின் கணக்குகளை அழிக்கமாட்டோம் என நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது . வாட்ஸ்அப் புதிய கொள்கையின்படி தனது தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்வதாக கூறியிருந்தது . வாட்ஸ்அப் நிறுவனம் தனது சக போட்டியாளர்களான டெலிகிராம் , சிக்னல் ஆகியவற்றை விட மக்களை கவர்ந்திருந்தது . இதற்கு காரணம் , எளிமைதான் . இதன் எளிமைத்தன்மையை டெலிகிராம் போன்ற எளிய ஆப்புடன் கூட ஒப்பிட முடியாது . டெலிகிராமை பலரும் படங்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தினால் வாட்ஸ்அப்பை குறுஞ்செய்தி அனுப்ப , அலுவலக வட்டாரச்செய்தி , அதில் பிறருக்கு அழைத்து பேச என பல்வேறு விஷயங்களை செய்யமுடியும் . இலவசமாக ஒரு ஆப்பை தருகிறார்கள் என்றாலே அதில் பயனர்களின் தகவல்களை எடுத்து தங்களது லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றுதான் பொருள் . ஆனால் அதனை உள்ளது உள்ளபட

வாட்ஸ்அப்பில் ரகசியம் பறிபோகிறதா? - வாட்ஸ்அப் பயனர் ரகசியங்கள்

படம்
        வாட்ஸ்அப் பாதுகாப்பானதா? வாட்ஸ்அப்பில் ஒருவர் பிறருக்கு அனுப்பும் செய்திகள் போன் மெமரியில் இடம்பெற்றிருக்கும். எனவே, செய்திகளை ஆப்பில் அழித்துவிட்டாலும், ஹேக்கர்கள் மூலம் போனிலுள்ள செய்திகளை மீட்டு எடுக்கலாம். தொலைதூரத்தில் கூட இருந்து கூட ஆப்பை இயங்க வைக்கமுடியும். செய்திகளை மீட்டெடுக்க முடியும். போன், நிரந்தரமாக அழிக்கப்பட்டால் தகவல்களைப் பெற முடியாது. வாட்ஸ்அப்பை க்ளவுட் முறையில் ஒருவர் இணைத்து வைத்திருந்தால், அதிலுள்ள தகவல்களை காவல்துறை பெறமுடியும். இம்முறையில் கூகுள் டிரைவ், ஐக்ளவுட் ஆகியவை செயல்படுகின்றன. இந்த வசதியை ஒருவர் பயன்படுத்தினால், சிம்மை புதிய போனில் செயல்படுத்தும்போது, அவர் பதிவு செய்த அனைத்து தொடர்புகளும் அப்படியே புதிய போனில், இன்ஸ்டால் செய்யப்படும் ஆப் மூலம் வந்துவிடும். வாட்ஸ்அப் வழியே அனுப்பப்படும் செய்திகள் ஒருவருக்கு சென்று சேர்ந்தவுடன் அவை வாட்ஸ்அப் நிறுவன சர்வர்களிலிருந்து அழிக்கப்பட்டுவிடுகிறது. செய்தி ஒருவருக்கு சென்று சேராத சூழலில் என்கிரிப்ட் செய்யப்பட்டு 30 நாட்கள் சர்வரில் இருக்கும். வாட்ஸ்அப் வழியாக ஒருவர் செய்யும் அழைப்பு, செய்தி, இணைய முகவரி,

பாசிசத்தை தூண்டும் ஃபேஸ்புக்- முகநூலின் மறுபக்கம்!

படம்
ரியல் ஃபேஸ் ஆஃப் ஃபேஸ்புக் இன் இந்தியா பரன்ஜோய் - சிரில் சாம் இந்தியாவில் 2004 ஆம் ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளத்தினால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அனைவரையும் இணைக்கிறோம் என்று ஃபேஸ்புக் சொன்னாலும், உண்மையில் மக்கள் இன்று தம்மைத் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை. அப்படியொரு பயத்தை ஃபேஸ்புக்கும் அதன் சகோதர நிறுவனமான வாட்ஸ் அப்பும் உருவாக்கியுள்ளன. இப்படி கூறிய சிரில் சாம், பரன்ஜோய் ஆகிய இருவரும் அதற்கான தகவல்களை அடுக்குகின்றனர். இவர்கள் கூறும் எதனையும் மறுக்க முடியவில்லை என்பது முக்கியமானது. எப்படி பாஜக, காசு கொடுத்து ஃபேஸ்புக் மூலம் திட்டமிட்ட பொய் செய்திகளை, போலி வீடியோக்களை உருவாக்கி மக்களின் மனதில் பயத்தை உருவாக்குகின்றன என்பதை விளக்கியுள்ளனர். இதில் பிரசாந்த் கிஷோர் என்ற டெக் நபரின் பங்கும் முக்கியமானது. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி நினைவிருக்கிறதா...... பிளான் பெத்த பிளான்தான். ஆனால் கொஞ்சமேனும் நம்பிக்கையை மக்களிடம் சம்பாதித்து வைப்பதில் அன்புமணி தடுமாறிவிட்டார். வீழ்ந்துவிட்டார். இதனால் முதல் கையெழுத்தை இன்னும் அவர் செக் புக்கில் மட்டும் போட்டுக்கொண்டிருக்கிற