வாட்ஸ்அப்பில் ரகசியம் பறிபோகிறதா? - வாட்ஸ்அப் பயனர் ரகசியங்கள்

 

 

Icon, Icons, Icon Whatsapp, Whatsapp, Phone, Call

 

 

வாட்ஸ்அப் பாதுகாப்பானதா?

வாட்ஸ்அப்பில் ஒருவர் பிறருக்கு அனுப்பும் செய்திகள் போன் மெமரியில் இடம்பெற்றிருக்கும். எனவே, செய்திகளை ஆப்பில் அழித்துவிட்டாலும், ஹேக்கர்கள் மூலம் போனிலுள்ள செய்திகளை மீட்டு எடுக்கலாம். தொலைதூரத்தில் கூட இருந்து கூட ஆப்பை இயங்க வைக்கமுடியும். செய்திகளை மீட்டெடுக்க முடியும்.

போன், நிரந்தரமாக அழிக்கப்பட்டால் தகவல்களைப் பெற முடியாது. வாட்ஸ்அப்பை க்ளவுட் முறையில் ஒருவர் இணைத்து வைத்திருந்தால், அதிலுள்ள தகவல்களை காவல்துறை பெறமுடியும். இம்முறையில் கூகுள் டிரைவ், ஐக்ளவுட் ஆகியவை செயல்படுகின்றன. இந்த வசதியை ஒருவர் பயன்படுத்தினால், சிம்மை புதிய போனில் செயல்படுத்தும்போது, அவர் பதிவு செய்த அனைத்து தொடர்புகளும் அப்படியே புதிய போனில், இன்ஸ்டால் செய்யப்படும் ஆப் மூலம் வந்துவிடும்.

வாட்ஸ்அப் வழியே அனுப்பப்படும் செய்திகள் ஒருவருக்கு சென்று சேர்ந்தவுடன் அவை வாட்ஸ்அப் நிறுவன சர்வர்களிலிருந்து அழிக்கப்பட்டுவிடுகிறது.

செய்தி ஒருவருக்கு சென்று சேராத சூழலில் என்கிரிப்ட் செய்யப்பட்டு 30 நாட்கள் சர்வரில் இருக்கும்.

வாட்ஸ்அப் வழியாக ஒருவர் செய்யும் அழைப்பு, செய்தி, இணைய முகவரி, அவரின் இருப்பிடம் ஆகியவை வாட்ஸ்அப் செயலில் பதிவாகும். அதனை காவல்துறை அணுகலாம்.

வாட்ஸ்அப்பில் ஆட்டோ பேக்அப் செய்தால், அனைத்து செய்திகளும், தொடர்பு முகவரிகளும் க்ளவுட் முறையில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

india today







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்