வெப்தொடர், சினிமா இரண்டிலும் பேலன்ஸ் செய்து நடிப்பேன்! - விஜய் வர்மா

 

 

First-look: Vijay Varma turns 90s student for Hurdang ...

 

 


மொழிபெயர்ப்பு நேர்காணல்


ரீடர்ஸ் டைஜஸ்ட்

சுகானி சிங்


நடிப்பிற்கு உங்களை அழைத்து வந்தது எது?


நான் குடும்ப தொழிலை செய்யக்கூடாதுஎன்று நினைத்தேன். அதற்காக பேஷன் டிசைன், டாட்டூ டிசைனர், விழாக்களை நடத்துவது, மென்பொருள் பொறியாளர் என பல்வேறு வேலைகளை செய்துள்ளேன். இதில் சிலவற்றை வெற்றிகரமாக செய்துள்ளேன். சிலவற்றை மோசமாக செய்துள்ளேன். எதுவாக இருந்தாலும் அனுபவங்கள் கிடைத்தன என்று நினைத்துக்கொண்டேன். நான் நடிகனாக இருக்கவேண்டும் என்பதைத்தான் ரகசியமான ஆசையாக நினைத்துக்கொண்டேன். அப்போதைக்கு அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


சினிமா, டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தது உங்கள் கனவை நிறைவேற்ற உதவியதா?


இன்ஸ்டிடியூட், எனக்கு புதிய சன்னலைத் திறந்தது என்பது உண்மை. உண்மையில் அது விபத்துபோலத்தான் நடந்தது என்பேன். அப்போது இன்ஸ்டிடியூட் இருபது ஆண்டுகளாக முக்கியமான நடிகர்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. நான் முதல் முறை விண்ணப்பித்தபோது அங்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த நிராகரிப்பை என்னால் மறக்கவே முடியாது.பின்னர், ஹைதராபாத் சென்று சூத்ரதார் என்ற நாட குழுவில் சேர்ந்து நடித்து வந்தேன். ஒன்பது மாதங்களில் ஐந்து நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த து. அங்குதான் வினய் வர்மா என்ற எனது ஆசானை சந்தித்தேன். அவரது வழிகாட்டலில் மீண்டும் இன்ஸ்டிடியூட்டிற்கு விண்ணப்பித்தேன். இம்முறை எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது.


கல்லி பாய் படம் வெற்றிக்கு பிறகு வாழ்க்கை மாறிவிட்டதா?


நான் அதிகம் பேசாத இன்ட்ரோவர்ட். யாரிடமும் எனக்கு வேலை வேண்டும் என்று கேட்டதில்லை. படத்தின் வெற்றியால் எனக்கு பணம் கிடைத்தது. நிறைய வேலைவாய்ப்புகள் கிடைத்தன. முக்கியமாக என்னால் குடும்பத்தை பார்த்துக்கொள்ள முடிந்தது. வாழ்க்கை நல்லவிதமாக சென்று கொண்டிருக்கிறது.



பிங்க் படம் தொடங்கி ஷீ வெப் தொடர் வரை எதிர்மறையாக கதாபாத்திரங்களில் அதிகம் நடிக்கிறீர்களே?


நான் எதிர்மறை பாத்திரங்களில் நடிக்க பயப்படவில்லை. அவர்கள் என்னிடம் இப்படிப்பட்ட பாத்திரத்தை கொடுத்தால் நான் செய்து கொடுப்பேன். நடிப்பதற்கு வாய்ப்பிருந்தால் நடிக்கவேண்டியதுதான். சூஜித் சர்கார், ஜோயா அக்தர், இம்தியாஸ் அலி ஆகியோரின் படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதனால்தான் சூப்பர் 30, பாகி 3 ஆகிய படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்தேன். கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கவேண்டும் என்பதையே விரும்புகிறேன்.


இன்று அனைத்து நடிகர்களும் ஓடிடி, திரைப்படங்கள் என அனைத்திலும் நடிக்கிறார்கள். நீங்கள் எப்படி?


நான் இரண்டையும் பேலன்ஸ் செய்து நடிக்கவிரும்புகிறேன். ஷீ என்ற வெப் தொடர்தான் நான் நடித்து இணையத்தில் வெளியான முதல் தொடர். நான் நடிக்கும் பாத்திரம் எனக்கு சவாலாக, என்னை மிரட்டுவதாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.







 

கருத்துகள்