மக்களின் முன்னே நின்று அவர்களை சிரிக்க வைப்பது எளிதானது அல்ல! கேரி மினாட்டி
கேரி மினாட்டி
கேரி மினாட்டி
யூடியூப் பிரபலம்
உங்களை பிக்பாஸில் பார்க்க முடியும் என சிலர் சொல்லுகிறார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
இல்லை. இப்போதைக்கு இல்லை. நான் அந்த நிகழ்ச்சியை பின்தொடர்வது இல்லை. இன்று தங்கள் கருத்தை சொல்லுவதற்கு அனைவருக்கும் பிடித்திருக்கிறது. தன்னைத்தானே எள்ளல் செய்வதும் பலரும் செய்துவருகிறார்கள். இது நேர்மையானதும் கூடத்தான்.
நீங்கள் ஆசியாவில் அதிக மக்கள் பின்தொடரும் யூடியூபர். இது உங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா?
என்னுடைய முன்கதையை பலரும் தெரியாமல் பேசுவது எனக்கு சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கும். நீங்கள் மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவது எளிதல்ல. நான் செய்வது உலகில் வேடிக்கையான ஒன்று.
நீங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள். இதனை உங்கள் டிரேட்மார்க் என்று சொல்லலாமா?
இல்லை. இந்த பாணி நிகழ்ச்சியை எனது அடையாளம் என்று கூறமுடியாது. நான் எடுக்கும் சில விஷயங்கள். இதற்கு சரியானவை என்று தோன்றுவதால், அதனைப் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான். மக்கள் விரும்பினால், விமர்சனம், கோபமூட்டும் பதிவுகள் கூட இணையத்தில் முன்னே வரும்.
பல யூடியூப் சேனல் இளைஞர்கள் நடிக்கத் தொடங்கியுள்ளனர். உங்களுக்கு நடிக்க தோன்றவில்லையா?
வாய்ப்புகள் வந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் நான் இப்போதைக்கு நடிப்பை முழுமையாக நம்பி அதில் இறங்கவில்லை. பின்னாளில் நான் நடிக்கலாம். ஆனால் இப்போதல்ல. நடிப்பு என்று இறங்கினால் அதற்கென உங்களைத தயாரித்துக் கொள்வது முக்கியம். இப்போதைக்கு எனது எண்ணம் அதில் இல்லை.
சுகானி சிங்
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக