மூளை பற்றி நாம் அறியாத தகவல்கள்! - புத்தகம் புதுசு!

 

 

 

 

Fossil Men - Kermit Pattison - Hardcover

புத்தகம் புதுசு!


ஃபாசில் மேன் தி க்வெஸ்ட் ஃபார் தி ஓல்டஸ்ட் ஸ்கெலிடன் அண்ட் தி ஒரிஜின்ஸ் ஆஃப் ஹியூமன்கைண்ட்


கெர்மித் பட்டீசன்.


மனிதர்கள் எங்கே எப்படி தோன்றினார்கள், இடம்பெயர்ந்தார்கள் என்று அறிய பலருக்கும் ஆர்வம் உண்டு. அதைப்பற்றிய நூல்தான் இது. இந்த நூலில் ஆசிரியர் உலகிலேயே தொன்மையான மனிதரின் மண்டையோட்டை முன்வைத்து அவர் எங்கு தோன்றினார் என்பதை சுவாரசியமாக விவரிக்கிறார்.


செவன் அண்ட் எ ஹாஃப் லெசன்ஸ் அபவுட் தி பிரெய்ன்


Seven and a Half Lessons About the Brain | Lisa Feldman ...

லிசா ஃபெல்டுமன் பெரட்


மூளை பற்றி இல்லாத்தும் பொல்லாததுமாக ஏராளமான கட்டுரைகள், தகவல்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து ஆசிரியர் எது சரி, எது தவறு என விளக்கியுள்ளார். நாம் சிந்திப்பது எப்படி, இடது, வலது மூளை பாகங்களின் பங்களிப்பு நம் வளர்ச்சியில் என்பதைப் பற்றிய விவரிப்பு அருமையாக உள்ளது.


வாட் டு எக்ஸ்பெக்ட் வென்

யூ ஆர் எக்ஸ்பெக்டிங் ரோபோட்ஸ் தி ஃப்யூச்சர் ஆஃப் ஹியூமன் ரோபாட் கொலாபரேஷன்


லாரா மேஜர் அண்ட் ஜூலி ஷா


ரோபோட்டுகள் இப்போது மனிதர்களின் வேலையை பறித்து வருகின்றன. பெருந்தொற்று சூழ்நிலை இதனை வேகப்படுத்தியுள்ளது. இந்த நூலை எழுதியுள்ள ஆசிரியர்கள், ரோபோட்டுகள் மனிதர்களை முந்த முடியாது. அவற்றுடன் நாம் இணைந்து வேலை செய்வோம் என்று நம்பிக்கை தருகிறார்கள். அடுத்துவரும் சமூகம், ரோபோபாட் எனும் சமூகம் எனவும் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.


கில் ஷாட் எ ஷாடோ இண்டஸ்ட்ரி, எ டெட்லி டிசீஸ்


ஜாஸன் டியர்ன் 

 

Humankind’s Origins, Medical Mysteries and Robots: Check ...


2012ஆம் ஆண்டு பூஞ்சைகளால் ஏற்பட்ட பாதிப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆரோக்கியமான நபர்கள் இறந்தனர். இந்த விவகாரம் பற்றி ஆராய்கிற நூல் இது. பத்திரிகையாளர் ஜேசன் இதுபற்றிய ஏராளமான ஆவணங்களை முன்வைத்து இதில் உள்ள கண்ணுக்கு தெரியான பல்வேறு விஷயங்களை கோடிட்டு காட்டுகிறார்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்