பெற்றோரை மீட்டு கொண்டு வர மந்திர நாற்காலியுடன் போராடும் சிறுவர்கள்! - தி மேஜிக் ட்ரீ 2009
மேஜிக் ட்ரீ
மந்திரசக்தி கொண்ட மரத்தை வெட்டி பல்வேறு பொருட்களை செய்கிறார்கள். அவற்றில் ஒரு துளி சக்தி மிஞ்சுகிறது. இதனால் சில பொருட்கள் தன்னிச்சையாக இயங்குகின்றன. ஆனால் அது எதனால என்று தெரியாமல் மனிதர்கள் அதனை வீடியோக்களாக எடுத்து பகிர்கிறார்கள். அப்போது முழு மந்திரசக்தியும் ஒரு நாற்காலிக்கு கிடைக்கிறது. அந்த நாற்காலி மூன்று சிறுவர்களைக்கொண்டு குடும்பத்திற்கு எதேச்சையாக கிடைக்கிறது. அவர்களுக்கு பெரிய பேராசை ஏதும் கிடையாது. பெற்றோர் தம்மிடம் பாசமாக இருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கவேண்டும். அவ்வளவுதான். இதனை தான் அவர்கள் வேண்டுகோளாக முன்வைக்கிறார்கள். இந்த விஷயம் நிறைவேறும்போது ஏற்படும் பாதிப்புகள், பக்க விளைவுகள்தான் படம்.
குழந்தைகள் படம் என்பதால், அவர்களின் மனதில் உள்ள விஷயங்களை மீறிப்போகாமல் படம் எடுப்பது கடினம். இந்த படம் அந்தவகையில் குழந்தைகளின் மனதிற்கு நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. கொடுமைக்கார அத்தையை திட்டும்போது கூட அவள் சின்ன பெண்ணாக மாறிவிடவேண்டும் என்றுதான் வேண்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் அத்தையும் கூட அப்படியே இருப்பது நல்லது என நினைக்கும்படி அனைத்து விஷயங்களும் நடக்கிறது. இதில் வில்லன் கொஞ்சம் வேடிக்கையான ஆள்.
பொழுதுபோக்கு விழாக்களை நடத்தும் அளவுக்கு கையில் காசுள்ளவர்தான்.ஆனால் வேலை செய்யாமல் காசு கிடைத்தால் சூப்பர்தானே? அதனால் அவன் நாற்காலியிடம் பணக்காரனாகும் யோசனையை சொல்கிறான். ஆனால் நாற்காலி அதற்கு மறுக்கிறது. அதனை அவன் துரத்த தொடங்குகிறான். நாற்காலி சிறுவர்களிடம் ஓடத் தொடங்குகிறது.
பெற்றோர்களின் அன்பு, பணத்தை விட மதிப்பானது என்ற கருத்தை படம் நெடுக வலியுறுத்துகிறார்கள். கண்டிப்பான அத்தை பாத்திரம் கண்டிப்பாக மாறுவதற்கு இளமைக்கால வாழ்க்கை காணமாக உள்ளது.
ஜாலியாக ரசிக்கலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக