எதுவும் செய்யாமல் இருக்க ஆசைப்பட்டேன். பெருந்தொற்று காலம் தற்செயலாக கிடைத்தது! நவாசுதீன் சித்திக்

 

 

 

நவாசுதீன் சித்திக்

 

நேர்காணல்


நவாசுதீன் சித்திக்


படப்பிடிப்பு இல்லாத காலம் எப்படி இருந்தது?


எனக்கு படப்பிடிப்பு இல்லாத காலம் தேவைப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். பெருந்தொற்று காலகட்டம் நான் எதிர்பாராமல் எனக்கு கிடைத்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள எனது புதானா கிராமத்தில் விவசாய வேலைகள் செய்தேன். இக்காலகட்டத்தில் 250 படங்களை பார்த்தேன். டென்ஷில் வாஷிங்டன், டேனியல் டே லூயிஸ், ஆன்டனி ஹாப்கின்ஸ் ஆகிய எனக்குப் பிடித்த நடிகர்களின் படங்களைப் பார்த்தேன். இது எனது சினிமாக்களை மேம்படுத்த உதவும் என நம்புகிறேன்.


சினிமாவில் இருபது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறீர்கள். உங்கள் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்.


நான் இப்போதும் வேலை செய்துகொண்டிருக்கிறேன். இனியும் பணியாற்றுவேன் என்று நினைக்கிறேன். சிலசமயங்களில் நான் நடிக்கும் படம் வெற்றிபெறும். அல்லது தோல்வியுறும். இது எனது கையில் கிடையாது. கதாப்பாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் நடிக்கிறேன். அதில் உள்ள சவால்கள் என்னை மெருகேற்றுகின்றன.


நாயகனாக நடிக்கும் படங்களில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.


நான் மண்டோ, போட்டோகிராப் ஆகிய படங்களில் நடித்தேன். அதேபோல மூளை செல்களுக்கு வேலை கொடுக்காத படங்களும் நடிக்க விரும்புகிறேன். சில படங்களை நமக்காகவும், சில படங்களை ரசிகர்களைச் சென்று சேரவும் கூட நடிக்கலாம். நான் அப்படி தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை.


சினிமாதுறை கடுமையான தாக்குதலை சந்தித்து வருகிறது?


சினிமாதுறை வெறும் நட்சத்திர நடிகர்களை மட்டும் நம்பி இயங்கவில்லை. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதை நம்பியிருக்கிறார்கள். இப்படி தாக்குதல் நடைபெறும்போது அவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்க்ள். பலருக்கும் நிறைய வாய்ப்புகளை இத்துறை வழங்குகிறது. நேற்று வெளிநபராக பார்க்கப்பட்டவர், இன்று உள்ளே உள்ளவராக கவனிக்கப்படுவது கூட நடக்கிறது.


சுகானி சிங்




கருத்துகள்