தலித்துகள் கழுதையில் ஏறி வந்தால் உயர்சாதியினர் சந்தோஷப்படுகிறார்கள்! - சந்திரா பான் பிரசாத்

சந்திரா பான் பிரசாத்

சந்திரா பான் பிரசாத்
சமூக பொருளாதார செயல்பாட்டாளர், எழுத்தாளர்.

ஹாத்ராவில் தலித் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டு இறந்துள்ளார். தலித்துகள் சார்ந்து இதுபோல நடைபெறும் கொடுமைகள் இன்றுவரை குறையவில்லை. இதற்கு என்ன காரணம்?

இந்தியாவில் ஒரு சமூக அவசரநிலை நிலவுகிறது. 1932ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தம் டாக்டர் அம்பேத்கர், காந்தி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டது. இதன்பிறகு தலித்துகள் மெல்ல மையநீரோட்டத்திற்கு வந்தனர். பிறகு மெல்ல தலித்துகள் பிரச்னை மீது இரக்கம் கொள்ளத் தொடங்கினர். இப்போது அவ ர்கள் மீது வன்முறை நடத்தப்படுவது புதிய நாகரிகமாகிவிட்டது. 1970களில் இருந்த தீண்டாமை என்பது தலித்துகளை கொல்வதல்ல. வேட்டி அணியக்கூடாது, உயர்சாதிக்கார ர்கள் வந்தால் சைக்கிளில் வந்தால் கூட கீழே இறங்கி நடக்கவேண்டும், யாரையேனும் அவர்களது பெயர் சொல்லி கூப்பிட்டால் அவர்களை அடிப்பது ஆகியன அன்று நடந்தது. ஆனால்  இன்று ஹாத்ரா, லகிம்பூரில் நடப்பது போல கற்பழிக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்ட்டு கொல்லப்படவில்லை. ஆனால் அன்றும் கற்பழிப்புகள் நடந்தன. ஆனால் அவர்கள் யாரும் கொல்லப்படுவதில்லை. அது மிகவும் அரிதாகவே நடந்தது.

பல பத்தாண்டுகளில் கல்வி கற்ற தலித்துகள் நடுத்தர வர்க்க மக்களாக உயர்ந்தனர். இட ஒதுக்கீடு இதில் முக்கியமான பங்கு வகித்தது. ஆனால் உயர்சாதியினர் இதனை ஏற்கவில்லை., அவர்கள் தலித்துகளை, டாக்டர் அம்பேத்கரை பழித்தனர். அரசியலமைப்பை தூற்றினர். இதனால்தான் உ.பியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு இரும்புக்கூண்டு அமைக்கப்பட்டிருக்ககும்.

முன்னர் சாதி சமூகம் தலித்துகளை துரத்திக்கொண்டிருந்தது. சவாலாக இருந்தது. இன்று அதேபோல உ.பியிலுள்ள முதல்வர் யோகி, அரசையும் தனது நோக்கத்தையும் வலியுறுத்திவருகிறார். சாதிசார்ந்த பாகுபாட்டை அரசு அதிகாரத்துடன் மாநிலமெங்கும் அமல்படுத்தி வருகிறார்.

பல்வேறு களங்களுக்குச் சென்றபோது, தலித்துகளுக்கு பாதுகாப்பில்லாத உணர்வு இருந்ததா?

உ.பியில் கூட தலித்துகள் உயர்சாதியினரின் பிடியிலிருந்து சுதந்திரமாகத்தான் உள்ளனர். ஆனால் 1947க்கு முன்னர், உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் தலித்துகள் வாழ்ந்து வந்தனர். அவர்களது உடமைப் பொருளாகவே முன்னர், கருதினர். பின்னர் காளைகளுக்கு பதிலாக டிராக்டர்கள் வயலுக்கு வந்தனர். வயல் வேலைகளுக்கும் இயந்திரங்கள் வந்தன. இதனால் தலித் பெண்கள் அடிமை வேலைகளிலிருந்து விடுதலை ஆனார்கள். இன்று மாவட்ட ஆட்சியர் கூட சாதிக்கு எதிராக எதுவும செய்யமுடியாமல் அடி பணிகிறார். சாதியை லோகோவாக கூட சிலர் உருவாக்கிக்கொள்கிறார்கள்.  கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எந்த சாதி அங்கு வந்து படிக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் இடங்களாக மாறிவிட்டன. இதனை கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக துணைவேந்தர் தீர்மானிக்கிறார். இதனால் தலித் அதிகாரிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உபயோகமே இல்லாத் வேலைகளை கொடுத்து வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி இப்போது தலித் விவகாரங்களில் பெரிதாக தலையிடுவதில்லை. பீம் ஆர்மி தீவிரமாக செயல்பட்டு வருகிறதே?

பகுஜன் சமாஜ் தன்னுடைய செயல்திறனை முன்னமே தொலைத்துவிட்டது. இன்று பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத் தலித் பிரச்னைகளில் முன்னிலை வகிக்கிறார் இளைஞர்களை அவர் ஈர்த்திருக்கிறார். ஆனால் பழைய ஆட்கள் பகுஜனில்தான் இருக்கிறார்கள். பகுஜன் முதல் சர்வஜன் வரையிலான பேரணி, மக்களை ஊக்கப்படுத்தியது. சந்திரசேகர் ஆசாத்தின் பீம் பள்ளிகள் இளைஞர்களை பெரிதும் ஈர்த்துவருகிறது.

இந்த மோசமான சூழலிலும் நம்பிக்கையின் ஒளி தெரிகிறதா?

நிச்சயமாக 2015ஆம் ஆண்டு தலித் பெண்  ஒருவர் குடிமைத்தேர்வுகளில் வென்றார். பின்னர் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சிஏ தேர்வில் சாதனை படைத்தார். தலித்துகள் வணிகத்திலும் கூட சிறப்பாக சாதித்து வருகிறார்கள். டில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஜாக்குவார், ஆடி காரை சொந்தமாக வாங்கும்படி உயர்ந்திருக்கிறார். உ.பியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் தனது நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கியுள்ளார்.

நாங்கள் தலித்துகள் உரிமையாக கொண்டுள்ள மருத்துவமனைகள் பற்றிய காபிடேபிள் புத்தகத்தை உருவாக்கியுள்ளோம்.இ தில் உ.பி, பீகாரைச் சேர்ந்த தலித்துகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களால் தனியாக வறுமையை அழித்துவிட முடியாது. ஆனால் கீழே உள்ள தலித் மாணவர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு முக்கியமான எடுத்துக்காட்டு. தலித்துகள் தொழில்நுட்பத்துறையில் சிறப்பாக பசந்திரா பான் பிரசாத்
சமூக பொருளாதார செயல்பாட்டாளர், எழுத்தாளர்.

ஹாத்ராவில் தலித் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டு இறந்துள்ளார். தலித்துகள் சார்ந்து இதுபோல நடைபெறும் கொடுமைகள் இன்றுவரை குறையவில்லை. இதற்கு என்ன காரணம்?

இந்தியாவில் ஒரு சமூக அவசரநிலை நிலவுகிறது. 1932ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தம் டாக்டர் அம்பேத்கர், காந்தி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டது. இதன்பிறகு தலித்துகள் மெல்ல மையநீரோட்டத்திற்கு வந்தனர். பிறகு மெல்ல தலித்துகள் பிரச்னை மீது இரக்கம் கொள்ளத் தொடங்கினர். இப்போது அவ ர்கள் மீது வன்முறை நடத்தப்படுவது புதிய நாகரிகமாகிவிட்டது. 1970களில் இருந்த தீண்டாமை என்பது தலித்துகளை கொல்வதல்ல. வேட்டி அணியக்கூடாது, உயர்சாதிக்கார ர்கள் வந்தால் சைக்கிளில் வந்தால் கூட கீழே இறங்கி நடக்கவேண்டும், யாரையேனும் அவர்களது பெயர் சொல்லி கூப்பிட்டால் அவர்களை அடிப்பது ஆகியன அன்று நடந்தது. ஆனால்  இன்று ஹாத்ரா, லகிம்பூரில் நடப்பது போல கற்பழிக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்ட்டு கொல்லப்படவில்லை. ஆனால் அன்றும் கற்பழிப்புகள் நடந்தன. ஆனால் அவர்கள் யாரும் கொல்லப்படுவதில்லை. அது மிகவும் அரிதாகவே நடந்தது.

பல பத்தாண்டுகளில் கல்வி கற்ற தலித்துகள் நடுத்தர வர்க்க மக்களாக உயர்ந்தனர். இட ஒதுக்கீடு இதில் முக்கியமான பங்கு வகித்தது. ஆனால் உயர்சாதியினர் இதனை ஏற்கவில்லை., அவர்கள் தலித்துகளை, டாக்டர் அம்பேத்கரை பழித்தனர். அரசியலமைப்பை தூற்றினர். இதனால்தான் உ.பியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு இரும்புக்கூண்டு அமைக்கப்பட்டிருக்ககும்.

முன்னர் சாதி சமூகம் தலித்துகளை துரத்திக்கொண்டிருந்தது. சவாலாக இருந்தது. இன்று அதேபோல உ.பியிலுள்ள முதல்வர் யோகி, அரசையும் தனது நோக்கத்தையும் வலியுறுத்திவருகிறார். சாதிசார்ந்த பாகுபாட்டை அரசு அதிகாரத்துடன் மாநிலமெங்கும் அமல்படுத்தி வருகிறார்.

பல்வேறு களங்களுக்குச் சென்றபோது, தலித்துகளுக்கு பாதுகாப்பில்லாத உணர்வு இருந்ததா?

உ.பியில் கூட தலித்துகள் உயர்சாதியினரின் பிடியிலிருந்து சுதந்திரமாகத்தான் உள்ளனர். ஆனால் 1947க்கு முன்னர், உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் தலித்துகள் வாழ்ந்து வந்தனர். அவர்களது உடமைப் பொருளாகவே முன்னர், கருதினர். பின்னர் காளைகளுக்கு பதிலாக டிராக்டர்கள் வயலுக்கு வந்தனர். வயல் வேலைகளுக்கும் இயந்திரங்கள் வந்தன. இதனால் தலித் பெண்கள் அடிமை வேலைகளிலிருந்து விடுதலை ஆனார்கள். இன்று மாவட்ட ஆட்சியர் கூட சாதிக்கு எதிராக எதுவும செய்யமுடியாமல் அடி பணிகிறார். சாதியை லோகோவாக கூட சிலர் உருவாக்கிக்கொள்கிறார்கள்.  கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எந்த சாதி அங்கு வந்து படிக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் இடங்களாக மாறிவிட்டன. இதனை கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக துணைவேந்தர் தீர்மானிக்கிறார். இதனால் தலித் அதிகாரிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உபயோகமே இல்லாத் வேலைகளை கொடுத்து வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி இப்போது தலித் விவகாரங்களில் பெரிதாக தலையிடுவதில்லை. பீம் ஆர்மி தீவிரமாக செயல்பட்டு வருகிறதே?

பகுஜன் சமாஜ் தன்னுடைய செயல்திறனை முன்னமே தொலைத்துவிட்டது. இன்று பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத் தலித் பிரச்னைகளில் முன்னிலை வகிக்கிறார் இளைஞர்களை அவர் ஈர்த்திருக்கிறார். ஆனால் பழைய ஆட்கள் பகுஜனில்தான் இருக்கிறார்கள். பகுஜன் முதல் சர்வஜன் வரையிலான பேரணி, மக்களை ஊக்கப்படுத்தியது. சந்திரசேகர் ஆசாத்தின் பீம் பள்ளிகள் இளைஞர்களை பெரிதும் ஈர்த்துவருகிறது.

இந்த மோசமான சூழலிலும் நம்பிக்கையின் ஒளி தெரிகிறதா?

நிச்சயமாக 2015ஆம் ஆண்டு தலித் பெண்  ஒருவர் குடிமைத்தேர்வுகளில் வென்றார். பின்னர் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சிஏ தேர்வில் சாதனை படைத்தார். தலித்துகள் வணிகத்திலும் கூட சிறப்பாக சாதித்து வருகிறார்கள். டில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஜாக்குவார், ஆடி காரை சொந்தமாக வாங்கும்படி உயர்ந்திருக்கிறார். உ.பியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் தனது நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கியுள்ளார்.

நாங்கள் தலித்துகள் உரிமையாக கொண்டுள்ள மருத்துவமனைகள் பற்றிய காபிடேபிள் புத்தகத்தை உருவாக்கியுள்ளோம்.இ தில் உ.பி, பீகாரைச் சேர்ந்த தலித்துகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களால் தனியாக வறுமையை அழித்துவிட முடியாது. ஆனால் கீழே உள்ள தலித் மாணவர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு முக்கியமான எடுத்துக்காட்டு. தலித்துகள் தொழில்நுட்பத்துறையில் சிறப்பாக பங்களித்து வருகிறார்கள். அதனை விட அவர்கள் வறுமையில் உள்ள தகவல்களை மட்டுமே பலரும் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். தலித்துகள் குதிரையில் ஏறி வலம் வருவதை இந்தியர்கள் விரும்பவில்லை. அவர்கள் கழுதையில் பயணிக்க நினைக்கிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா
அவ்ஜித் கோஷ்

கருத்துகள்