தந்தையைக் கொல்லத் துடிக்கும் கணவனைத் தடுக்க நினைக்கும் காதல் மனைவியின் போராட்டம்! பிரேவ் அண்ட் பியூட்டிஃபுல் - துருக்கி

 

 

 

 

Cesur ve Güzel - Brave and Beautiful Teaser 2 - YouTube

 

பிரேவ் அண்ட் பியூட்டிஃபுல்

துருக்கி வெப்சீரிஸ்

தமிழ் 53, இந்தி 54-101

எம்எக்ஸ் பிளேயர்.

Written by:Ece Yörenç, Elif Usman, Serdar Soydan, Deniz Büyükkirli
Starring:Kıvanç Tatlıtuğ, Tuba Büyüküstün
Theme music composer    Toygar Işıklı
ஓவியராக உள்ள ஹசன் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அவரது ஓவியங்களை தாசின் கோர்லுதாக் என்பவர் திருடிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அறிந்த ஹசனின் மறைந்து வாழ்ந்த மகன் சீசர் அலாந்தர் எப்படி கோர்லுதாக் வந்து பழிக்குப்பழி வாங்குகிறார் என்பதை 101 அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு எபிசோடும் 49 நிமிடங்கள் என்பதால் முன்னரே நேரம் ஒதுக்கி பாருங்கள். படம் திரில்லர் ரொமான்ஸ் வகையைச் சேர்ந்தது.

பழிக்குப்பழி கதை என்றாலும் சீசர், சுகான் என்ற இரு பாத்திரங்களுக்கு இடையிலான அன்பும், நெகிழ்ச்சிமயமான உரையாடல்களும்தான்  வெப்சீரிசை திரைப்படத்தின் தரத்திற்கு உயர்த்துகின்றன. சீசரும், சுகானும் கண்ணோடு கண் பார்த்து பேசும் அனைத்து காட்சிகளும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளன. கோபத்தையும் அலட்சியத்தையும் உதட்டில் மறைத்து கண்கள் முழுக்க காதலை நிரப்பியபடி சுகான் சீசரிடம் பேசும் வசனக்காட்சிகள் உங்களை மெய்மறக்கச் செய்யும்.

சீசராக நடித்துள்ள கிவான்க் , சுகானாக நடித்துள்ள துபா என்று இரண்டு நடிகர்களின் தோள்களின்தான் வெப்சீரியசின் பெரும் சுமையே உள்ளது. இரண்டு பேரும் முதல் காட்சி தொடங்கி இறுதியாக மருத்துவமனை காட்சி வரையில் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஈடுகொடுத்து வெப்சீரிசை பார்க்க வைப்பது முக்கிய வில்லன் நடிகரான தாசின் கோர்லுதாக்காக நடித்து மிரட்டியுள்ள டாமர் வெவென்ட் என்ற நடிகர்தான். நாடக நடிப்பு அனுபவமோ என்னவோ இவர் வரும் காட்சிகளில் கண்களை மிரட்டி, உருட்டி, உரையாடலில் கொஞ்சலும் பாதி மிரட்டலும் இவர் பேசும் வசனமொழி அபாரம்.

தாசின் பெரும் பணக்காரர். ஒரு ஊரையே தன்னுடைய உழைப்பால் உருவாக்கியவர். அவருடைய குடும்ப பெயர்தான் அந்த ஊருக்கே வைக்கப்பட்டிருக்கிறது. அவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு வேறு யாரையுமே உதாரணம் சொல்லமுடியாதபடி அலட்டலும் உருட்டலுமாக நடித்திருக்கிறார். இறுதிக்காட்சியில் தன் மனைவி, மகன் ஆகியோரை இழந்துவிட்டு மகன் சுகான் கோமாவில் நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் படுத்திருக்கிறாள் என்பதை உணர்ந்து வாழ்வில் முதன்முறையாக எதிரியிடம் விட்டுக்கொடுக்கும் காட்சி அபாரம் சார்.

உளவியல் அடிப்படையில் சீசர் கதாபாத்திரம் இதற்கு நிகரே கிடையாது. எதிரி ஜெயிக்கும் நிலையிலும் கூட அதற்கென்ன இப்போ? என பேசியபடியே மறைவாக பிளான் செய்து  அவர்களை கழுத்தறுக்கும் காட்சிகள் தாசின் என்பவனி அதிரடியைச் சொல்லும். தமிழில் தாசின் குரலின் மிடுக்கு அபாரமாக உள்ளது. ஒரு துளி குற்றத்தின் நடுக்கம் கூட படியாத அதிகாரமும் அகங்காரமும் தெறிக்கும் குரல் அது.

சீரிசீன் முக்கியமான காட்சி டிரிசா சீசரின் அம்மாவை கடத்தி வந்து தாசின் கோர்லுதாக் கொலை செய்தது போல செட் செய்வது. அந்த காட்சி மற்றும் பிற காட்சிகள் கண்ணீரை அணை போட்டாலும் தடுக்க முடியாது. இத்தொடரின் தீம் இசை, பின்னணி இசை பொருத்தமாக உள்ளது. பெரும்பாலான இடங்களின் மென்சோகம் ததும்பும் வயலின் இசையை யாரும் மறக்கவே முடியாது. சுகானாக நடித்துள்ள நடிகை துபானின் அனைத்து உடைகளும் பிரமாதமானவை. சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவை.

பழிவாங்கினாலும் குடும்பத்தை காப்பாற்றுவது முக்கியம்.

கோமாளிமேடை டீம்
 

கருத்துகள்