பெருந்தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றி அறிந்துகொண்டேன் மானசி ஜோஸி
பாட்மின்டன் - மானசி ஜோஸி
இந்தியா டுடே, சுகானி சிங்
பாராலிம்பிக்ஸ் 2021இல் உங்கள் திட்டம் என்ன? இதில் பாட்மின்டன் பிரிவு இல்லையே?
நான் கலப்பு இரட்டையர் பிரிவில் ராகேஷ் பாண்டேவுடன் இணைந்து விளையாடப்போகிறேன். இவருடன் இணைந்து விளையாடி 2015இல் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி வென்றுள்ளேன். நாங்கள் இணைந்து விளையாடி போட்டிகளில் தகுதிபெற விரும்புகிறேன். அதிகளவு அழுத்தத்தை என்மேல் திணித்துக்கொள்ள விரும்பவில்லை.
கடந்த ஆண்டு உலக சாம்பியனான பிறகு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தூதராக செயல்பட்டீர்கள். இதில் உங்களுக்கு என்ன பொறுப்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்?
உறுப்புகளை இழந்த மக்களின் சார்பாக மட்டும் பேசுவதாக நினைக்கவேண்டாம். இதுபோல வாழும் மாற்றுத்திறனாளிகளின் சதவீதம் அதிகம். நான் இந்த பொதுமுடக்க காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பற்றி அறிந்துகொண்டேன்.
உங்களைப் போலவே பார்பி மாடல் உருவாக்கப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெண்கள் பிரிவில் இதுபோல பெருமை பெற்ற இரண்டாவது இந்தியப்பெண் நான் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. பொம்மை என்னை சிறப்பாக நகல் செய்து உருவாக்கப்பட்டுள்ளது.
மைதானத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதா?
எங்கள் வீட்டிற்கு அருகிலேயே விளையாடுவதற்கான இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் எனது சகோதரருடன் சமூக இடைவெளி விட்டு பயிற்சிக்காக விளையாடி வருகிறேன். வெளியூர் வீரர்களுடன் இன்னும் நான் பயிற்சி ஆட்டங்களை ஆடவில்லை. மார்ச் மாதம் வரை எங்களுக்கு எந்த விளையாட்டுப் போட்டியும் இல்லை. எனவே, உடலை வலுப்படுத்த நான் தினசரி ஓட்டப்பயிற்சி செய்துகொண்டிருந்தேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக