அமைதியான முகம், வன்முறையில் நிறைந்து தளும்பும் மனது! தி டிராப் - டாம் ஹார்டியின் தாண்டவம்
தி டிராப்
Based on"Animal Rescue"
by Dennis Lehane
Music by | Marco Beltrami[1] |
---|---|
Cinematography | Nicolas Karakatsanis |
செச்சன்ஸ் எனும் குற்றவாளி குழுக்களின் பணத்தை பரிமாறும் இடமாக பார் ஒன்று உள்ளது. அதன் உரிமையாளர் மார்வ். இவரின் சொந்தக்காரர் பாப் அங்கு பார் டெண்டராக பணிபுரிகிறார். அங்கு திடீரென நடைபெறும் கொள்ளையால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கொள்ளையில் இழந்த பணத்தை செச்சன்ஸ் கேட்கிறார்கள். பாப், மார்வ் இருவரும் தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லிவிடுகிறார். பாப் மட்டும் கொள்ளையடித்தவனின் வாட்ச்சை அடையாளம் சொல்லிவிடுகிறான். உண்மையில் அந்த கொள்ளையை திட்டமிட்டது யார், அதன் பின்னணியில் உள்ள துரோகி யார் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
படத்தில் நேரடியான சண்டைக்காட்சி எதுவும் கிடையாது கிளைமேக்ஸ் காட்சியை தவிர. ஆனால் படம் முழுக்க எப்போது யார் யாரை அடித்துக்கொள்வார்களோ என்ற அழுத்தம் நம்மை பரபரப்பிற்குள்ளாக்குகிறது. குறிப்பாக பாப் சகினோஸ்வ்கியாக நடித்துள்ள டாம் ஹார்டியின் நடிப்பு. எதற்கும் பதற்றப்படாமல் நிதானமாக இருக்கும் அவர் இறுதியில் செய்யும் காரியம் பலருக்கும் பீதியை ஏற்படுத்தும். எந்த அறிகுறிகளையும் முகத்தில் காட்டாமல் கையில் வேலையை திட்டமிட்டபடி செயதுமுடிக்கும் அழுத்தக்கார பாத்திரம்.
அனிமல் ரெஸ்க்யூ என்ற கதை சினிமாவாக மாற்றப்பட்டிருக்கிறது. அமைதியாகவே இருந்து ஏமாளிபோல இருக்கும் பாப் பாத்திரம் இறுதியில் புலியாக மாறுவது, அவரது காதலி நாடியாவுக்கு மட்டுமல்ல நமக்கும் பீதியாகிறது.
படம் மெதுவாக நகரும் படம்தான்.ஆனால் கிளைமேக்ஸில் நினைத்துப் பார்க்கமுடியாத பல்வேறு விஷயங்களுக்கு பதில் கிடைக்கிறது. அதுவரை படத்தை பொறுமையாக பார்ப்பது முக்கியம்.
உறுமும் மறுமுகம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக