இடுகைகள்

சிறந்த நூல்கள் 2021 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2021ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூல்கள்! - டைம் வார இதழின் பரிந்துரை

படம்
 2021இல் சிறந்த கட்டுரை நூல்கள் எ லிட்டில் டெவில் இன் அமெரிக்கா நேஷனல் புக் அவார்ட் பட்டியலில் இடம்பெற்ற நூல் இது. ஹனிப் அப்துராகிப் கருப்பர்கள் பற்றியும் கலாசார வேறுபாடுகளையும் எழுதியுள்ளார். கவிதையும் கட்டுரையும் சேர்ந்த வடிவமாக கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. நூலில் அமெரிக்காவின் வரலாறும் பேசப்பட்டது.  கிரையிங் என் ஹெச் மார்ட் மிச்செல் ஸானர், ஜப்பானிஸ் பிரேக்ஃபாஸ்ட் எனும் இசைக்குழுவை நடத்தி வந்தவர். தனது 25 வயதில் அவரது அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதற்குப்பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நூலாக எழுதியிருக்கிறார். கொரிய கலாசாரத்துடனான தொடர்பு, அடையாளம் ஆகியவற்றைப் பற்றி தேடி அவர் அடையும் விஷயங்களை நூலாக மாற்றியிருக்கிறார்.  இன்விசிபிள் சைல்ட் ஆண்ட்ரியா எலியட் என்ற நிருபர், தசானி என்ற சிறுமியைப் பார்க்கிறார். நியூயார்க் நகர காப்பகத்தில் அந்த சிறுமி வாழ்கிறார். அமெரிக்காவில் நிலவும் பாகுபாடு, வீடு இல்லாத நிலை, இனவெறி ஆகியவற்றை தசானி என்ற சிறுமியின் வாழ்க்கை வழியே ஆண்ட்ரியா பிரமாதமாக எழுதியுள்ளார்.  ஆப்டர்ஷாக்ஸ் நாடியா ஆவுசு எழுதிய சுயசரிதை இது. தான்சானியா