இடுகைகள்

உரையாடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மத மோதல்களை போக்கும் உரையாடலுக்கு ரெடி - விபின்குமார் திரிபாதி

படம்
  ஐஐடி டெல்லியில் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்றபிறகு என்ன செய்வார்? இருக்கும் தொடர்புகளை வைத்து வெளிநாடுகளுக்கு செல்வார், தனது சொந்த விஷயங்களை செய்வார். ஆனால் டெல்லியைச் சேர்ந்த விபின்குமார் திரிபாதி, நாடெங்கும் சென்று மதமோதல்களை தடுக்கும் முயற்சியை செய்து வருகிறார்.  ஏறத்தாழ இது வங்கப் பிரிவினையின்போது நடந்த மத மோதல்களை தடுக்க காந்தி தொடர்புடைய இடங்களுக்கு சென்ற சம்பவம் போல இருக்கிறதா? அதேதான். அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். அகிம்சை வழியில் முடிந்தளவு மக்களிடம் பேசி வன்முறை உணர்வை மட்டுபடுத்த நினைக்கிறார்.  பத்து பேரிடம் பேசினால் கோபமாக இருப்பவர்களில் ஒருவர் மட்டுமே என் பேச்சை கேட்கிறார். இந்த அளவில் எனது பணி இருக்கிறது. இந்தியா உயிர்வாழ்வது இப்படி பட்ட சிலரால்தான் என்கிறார்.  திரிபாதியின் உறவினர்கள் இவரையும் குடும்பத்தையும் பார்த்தாலே பதற்றமாகி வேறுபக்கம் திரும்பிக்கொண்டு வருகிறார்கள். நலம் விசாரித்தலைத் தாண்டி வேறு எதையும் அவர்கள் பேசுவதில்லை. ஆனாலும் திரிபாதி எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார். அதை நோக்கி போய்க்கொண்டே இருக்கிறார்.  வி

லா.ச.ராவின் நுட்பமான உரையாடல்கள்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் பகலில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரவில் அதன் வெளிப்பாடாக புழுக்கம் அதிகமாக உள்ளது.  மீனோட்டம் - லா.ச.ரா எழுதிய சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளைப் படித்தேன். அதில் இரண்டு மட்டும்தான் பிடிபட்டது. மீதி பலவும் நுட்பமான விஷயங்களைக் கொண்ட உரையாடல்கள். லா.ச.ரா அவரது சொந்தங்கள் கூட பேசுவது போலவே இருப்பதால் அதனை எளிதில் தொடர்புபடுத்திக்கொண்டு ஆர்வமாக படிக்க முடியவில்லை. மின்னூலாக படிப்பதில் அதிகம் சோதித்த நூல் இது. படிப்பை கைவிட்டுவிட்டேன்.  குமுதம் தீராநதி படித்தேன். குழந்தை எழுத்தாளர் கோதை சிவகண்ணகி பேட்டி நன்றாக வந்திருந்தது. இதழை ஆசிரியர் மலர்வதி ஒற்றையாளாக செய்கிறார் போல. இதழ் முழுக்க அவரின் கைவண்ணம்தான் அதிகம்.  சப்தரிஷி லா.ச.ரா எழுதும் தொடர் பரவாயில்லை ரகத்தில் இருக்கிறது. படிக்கலாம். ரணரங்கம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். சர்வானந்த் நம்பிக்கையுடன் நடித்த கேங்க்ஸ்டர் படம். காலத்தில் முன்னும் பின்னுமாக காட்சிகள் மாறி மாறி ஓடுகின்றன. கல்யாணி பிரியதர்ஷன் பிளாஷ்பேக் காட்சிகளில் பொருந்தால் வந்து ப

சமூகத்தோடு இளைஞர்கள் உரையாடுகிறார்களா?

படம்
giphy தெரிஞ்சுக்கோ! இன்று பேச்சு முழுக்க சமூக வலைத்தளங்கள் வழியாக நடந்தாலும், பேசுவது நாம்தானே. பேசுவது முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக உள்ளது. உரையாடலின் இடத்தை பெரும்பாலும் இன்று இமோஜி என்ற படங்கள் ஆக்கிரமித்துவிட்டன. குறைந்த உழைப்பில் அதிக விஷயங்களை இதன்மூலம் சொல்லிவிட முடிகிறது. அதுபற்றிய டேட்டா இதோ.... பார்ட்டியில் கலந்துகொள்பவர்களில் குறைந்தபட்சம் 8 பேர் புதிதாக இருக்கிறார்கள் என்கிறார் பிரபல செஃப் அலிசன் ரோமன். நாம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 140 முதல் 180 வார்த்தைகளை பேசுகிறோம். அதேசமயம் அதேநேரத்தில் 400 வார்த்தைகளை கவனிக்கிறோம். இதுவரை உலகிலேயே அதிக நேரம் பேசியது இருவர்தான். சமூகம், அக்வாரியம், மூளையின் சக்தி பற்றி இருவரும் சேர்ந்து 54 மணிநேரம் 4 நிமிடங்கள் பேசியிருக்கின்றனர். இங்கிலாந்திலுள்ள கஃபேக்களில் குறைந்தது 900 புதிய நபர்கள் அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதை சாட்டி கஃபே திட்டம் மூலம் ஊக்குவிக்கிறார்கள். சமூகம் தொடர்பான நிகழ்வுகளில் அமெரிக்கர்களின் பங்கேற்கு மொபைல் அளவில்தான் உள்ளது. இம்முறையில் 89 சதவீதம் பேர் சமூகத்தோடு இணைந்துள்ளனர். நன்றி -