மக்களை வகை பிரிப்பதும், இவர்கள் இப்படி என முடிவு செய்வதும் வன்முறையை ஊக்குவிக்கிறது

 

 

 

 



 

 

 

அகிம்சை வழி

மக்களை வகை பிரிப்பதும், இவர்கள் இப்படி என முடிவு செய்வதும் வன்முறையை ஊக்குவிக்கிறது

பொதுவாக நாம் அனைவரும் வணிக திரைப்படங்களைப் பார்த்து வருகிறோம். அதில் படம் முடியும் இறுதியில் நாயகர்கள், சிலரை அடித்து உதைக்கிறார்கள். அல்லது கொன்றுவிடுகிறார்கள். அடித்து உதைக்கப்படுபவர்கள், கொல்லப்படுபவர்கள் மோசமானவர்கள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என திரைப்படம் சித்திரிக்கிறது. பெரும்பாலான படங்களில் இதுவேதான் இறுதிக்காட்சியாக இருந்த காலமுண்டு. இதைப் பார்க்கும் பார்வையாளர்கள், நாயகர்கள் செய்யும் வன்முறையை, கொலையை நன்மைக்காகத்தான், நன்மையைக் காக்க இப்படித்தான் செய்தாக வேண்டும் என ஒருவாறு ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்.

இப்படியான மனநிலை சமூகத்தில் வன்முறையை இயல்பான ஒன்றாக கருத வைக்கிறது. பேச்சாக, உளவியல் ரீதியாக, குடும்ப உறுப்பினர்கள் மூலமாக, இனக்குழுக்கள் இடையே, நாடுகள் இடையே மாறுபட்ட கருத்துகள், செயல்கள் வழியாக வன்முறை உருவாகிறது. வன்முறையை பாராட்டி ஏற்றுக்கொண்ட சமூகத்தில் முரண்பாடுகள் வழியாக எளிதாக வன்முறை உருவாகி வளர்கிறது. இதில் பயம், வெறுப்பு ஆகியவற்றோடு என்ன விஷயங்களை இழந்திருக்கிறோம் என யோசிக்க வேண்டும். ஒருவரை தவறாகப் புரிந்துகொள்வதும், இன்னார் என வகைபிரிப்பதுமே முக்கிய பிரச்னையாக உள்ளது.

பனிப்போர் காலகட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யாவை தனது பெரிய எதிரியாக கருதியது. அதற்கு எதிரான செயல்களை செய்யத்தொடங்கியது. அரசியல் தலைவர்கள் அந்நாட்டை, அந்நாட்டுத் தலைவர்களை தீய சக்தியாக கருதினர். இதற்கு இருநாடுகளிலும் பின்பற்றிய கருத்தியல் வேறுபாடு முக்கியக் காரணம். அமெரிக்காவின் வெறுப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  ரஷ்ய நாட்டு அரசியல்வாதிகள், அமெரிக்காவை முதலாளித்துவ ஒடுக்குமுறையாளர்கள் என்று கூறி தூற்றினர். இப்படி இருநாடுகளும் ஒருவரையொருவர் மோசமாக லேபிள் குத்தி சண்டை போட்டுக்கொண்டன. இந்த சண்டை இன்றுவரை முடியாமல் அப்படியே தொடர்கிறது.

மூலம் - நான்வயலன்ட் கம்யூனிகேஷன் நூல்

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்