நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!

 

 

 

 

 

 



 

 

நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!

 அன்னா ஹசாரே உலகில் அணுக முடியாத அரசுகளின் அணுகுமுறையின்மீது  நேர்மறையான தனது நடவடிக்கைகளின் மூலம் மாற்றத்தை தூண்டியுள்ளார். இளைய தலைமுறை மூலம் மாற்றத்திற்கான வழியைக் கண்டறியும் ஆர்வத்திற்கு ஒளிபாய்ச்சியுள்ளார். இந்தியாவின் தரமான மதிப்புகளை மீண்டும் புதுப்பிக்க முயற்சித்துள்ளார். ஆம், நம்மில் பலரும் ஊழலை அமைப்பு (அ) வேறு வகையில் தூண்டப்பட்டு செய்தாலும் நம்மில் ஒரு பாகம் சரியானதாகவே இன்றும் மாறாமல் இருக்கிறது. அதை வலுபெறச் செய்தல் வேண்டும். ஜன்லோக்பால் மசோதா என்பதைத்தாண்டி அன்னா குழுவினரது நீதிக்கான போராட்டம் என்பதை சமூகத்திற்கான முக்கியமான பங்களிப்பு என்று கூறமுடியும்.

 இந்த சாதனைகளுக்கும் விலை உண்டு. நீண்டகாலமாக தீர்க்கப்படாத பல்வேறு குழப்பங்களைப் பார்க்கிறோம். அழகற்ற, மகிழ்ச்சியற்ற விஷயங்கள் பிடிவாதம், கர்வம், விட்டுக்கொடுக்காதவை என பொதுமக்களுக்கான பார்வையில் இவை தெரிகிறது. கருத்தியல் உலகில் மக்களுக்கு பொருத்தமான காரணத்தோடு தனது பதவி (அ) அதிகாரம் கொண்டு சரியானதை செய்ய முடியும். நாம் கருத்தியல் உலகிலிருந்து விலகி உண்மையில் குறையாத வாழ்வை வாழ்கிறோம்.

இளைஞர்கள் இம்முறை வெளியே வந்தது வேறு மதத்தைச் சேர்ந்த (அ) சாதியைச் சேர்ந்த மக்களை தாக்குவதற்காக அல்ல. அவர்கள் சமூகம் அழகானதாக, அமைதியானதாக மாறவேண்டும் என்று எளிய கோரிக்கையை முன்வைக்கவே வந்தார்கள். இது நாம் பெருமை கொள்ளும் தருணம் ஆகும். இந்தியாவின் தற்போதைய தலைமுறைக்கு மரியாதை செலுத்த வேண்டும்; உண்மையில் அவர்கள் வேறுபட்டவர்கள்.

 ஆங்கிலம் பேசும் அறிவுஜீவிகளின் விமர்சனங்கள்,  அன்னா ஹசாரே குறித்து எழுந்தது எனக்கு அதிர்ச்சியானதாகவும், நம்ப முடியாததாகவும் இருந்தது. மேல்தட்டு வர்க்கம் அன்னாவின் பின்னால் வலுவாக நின்றால் நமக்கு விரைவாகவும், உவப்பான உடன்பாடு கிடைக்கலாம். தங்கள் கருத்தை வெளிப்படுத்த மக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. அன்னாவின் பின்புலம், கையாண்ட போராட்ட முறைகள் (அ) வேகமாக புகழ்வெளிச்சம் பெற்றது என நாம் முன்னெடுக்கும் விஷயத்திற்கு பொருத்தமில்லாத பல கருத்துகளை எதிர்மறையாக வெளிப்படுத்தப்பட்டதை பார்க்க நேர்ந்தது.

 அன்னாவின் மீதான எதிர்கருத்து குழுக்கள்  நாடாளுமன்றம் என்பது அழிக்கப்படக்கூடாது என்று கூறுகின்றனர். நாடாளுமன்றம் மற்றும் சட்ட அமைப்பு ஆகியவை முக்கியமும், மரியாதை அளிக்கப்பட வேண்டியவையுமாகும். இவை அடிப்படையான மக்களின் நம்பிக்கையைப் பொறுத்தவை. மக்களின் நம்பிக்கையை இழந்துபோகும்போது அமைப்பு பயன்படாது. எனவே நாடாளுமன்றத்தினை புனரமைத்து பிறகு மக்களை மரியாதை செலுத்தக்கூறலாம்.

 மக்களுடைய நம்பிக்கைக்கு ஒரு உதாரணம்: நாம் காகிதத்தாள்களை பணம் என்று சட்டைப்பையில் வைத்திருக்க காரணம் மக்கள் அவற்றுக்கான மதிப்பை தருவதாலும், நம்புவதாலும்தான். பல்வேறு நாடுகளின் மக்கள் அந்நாட்டின் பணத்தில் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இது எப்படி நிகழ்கிறது என்றால், அரசு எந்த கவனமும் இல்லாமல் பணத்தை அச்சிட்டு வெளியிட்டால் அவற்றின் மதிப்பு ஜிம்பாவே நாடு போலவே குறைந்துவிடுகிறது.

2008 ஆம் ஆண்டு ஜிம்பாவேயில் ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் விலையானது இருமடங்காக அதிகரித்து கொண்டே சென்றது. நெறியில்லாத அரசு அதிகளவு பணத்தினை அச்சடிக்க, ஒரு பாக்கெட் ரொட்டி விலை பத்து பில்லியன் ஜிம்பாவேயன் டாலர்களாக உயர்ந்துவிட்டது. மக்கள் பணத்தினை கைவிட்டு அதற்கு பதிலாக பண்டமாற்று முறையினை கையில் எடுத்தார்கள். மேல்தட்டு அறிவுஜீவிகள் டி.வியில் அரசு கண்காணிப்பு அமைப்பு, அரசு, பணம் இவற்றினை மதிக்கவேண்டும் என்று கூறினால் எப்படி இருக்கும்? இதனை யாராவது ஏற்பார்களா? நம்பிக்கையை சரியான நேரத்தில் ஏற்படுத்தவேண்டும். அரசு தன் நிலைமையைப் புரிந்துகொண்டு இருப்பை உத்தேசித்து பணத்தை அச்சிடச்செய்தல் வேண்டும். ஜிம்பாவே அதனைச் செய்யவில்லை. எனவே மக்கள் வெளிநாட்டு பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

 இதுபோலவே இந்திய அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையும் அழிவைச் சந்தித்து வருகிறது, குறிப்பாக அரசின் மீதான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும். அவர்களின் தொடர்ச்சியான பொய்கள் நிலைமையினை மேலும் மோசமாக்குகின்றன. ஊழல் தீர்க்கப்படும் என்று கூறிக்கொண்டு அதற்கான முயற்சிகளில் சிறிதளவே ஈடுபடுகிறார்கள். பிரதமர் கூட கூட்டாட்சி சமரசங்கள் என்று கூறுகிறார். என்ன சமரசம்? உண்மை மீதான சமரசம் இல்லையா?

 பொய் கூறுவது அரசியல்வாதிகளின் நீண்டகால செயல்பாடாக இருக்கிறது. அதன் விளைவாக அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.லோக்பால் மசோதா அரசு மீதான நம்பிக்கையை திரும்ப மீட்க கூடும். மக்களின் தேவை என்பதைவிட அரசு வெளிப்படையாகவும், அணுக முடிவதாகவும் இருக்க லோக்பால் மசோதா தேவை. கட்சிகளின் பேச்சாளர்கள் தம்மை சுயவிமர்சனம் செய்துகொண்டு தம் கட்சி செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும்.

 அரசியல்வாதிகளின் பொறுப்பு குறித்து பேசும் மக்களாகிய நாம் நம்பிக்கையை சிறிது தக்க வைத்திருக்கவேண்டும். நாம் ஒரு வேட்பாளர் குறிப்பிட்ட ஜாதி, மதம், பகுதி என்பதற்காக வாக்களிக்கக்கூடாது என்பதை திரும்ப திரும்ப கூறிவருகிறேன். வேட்பாளர் அவன் (அ) அவள் தகுதி, திறமை, நேர்மை கொண்டவரா என சரிபார்த்து அனுப்பினால் தகுதியும், மரியாதையும் திரும்ப கிடைக்கும்.
              
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்