ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் உதவ காங்கிரஸ் தவிர்த்தும் ஏராளமான கூட்டணி கட்சிகள் உள்ளன! - அகா மெக்தி

 

 

 

 





அகா சையத் ருஹூல்லா மெக்தி
ஶ்ரீநகர் நாடாளுமன்ற உறுப்பினர்

370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் பற்றி காங்கிரஸ் கட்சி மௌனம் காக்கிறதே?

அச்சட்டப்பிரிவை திரும்ப கொண்டுவருவதாக காங்கிரஸ் கூறிவிட்டதே போதுமானது. அக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு நாடு முழுக்க ஆதரவான மனநிலை இல்லை என்பதால், அதைபற்றி அதிகம் பேசவில்லை என நினைக்கிறேன். மதவாத சக்திகளுக்கு எதிராக நாடு முழுக்க போராடி வருகிறோம். அந்த சமயத்தில் காங்கிரஸ் 370ஆவது பிரிவு பற்றி பேசவில்லையென்றால் பார்த்துக்கொள்ளலாம். காங்கிரஸ் கடந்து திமுக, திரிணாமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளிடம் பேசி வருகிறோம். கூட்டாட்சி முறையை உறுதிப்படுத்த அக்கட்சிகள் ஆதரவு தந்துள்ளன. எனவே, கூட்டாட்சி முறையை ஆதரிக்கும் நிறைய கட்சிகள் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவாக உள்ளன.

பிடிபி ஏன் உங்களோடு இணையவில்லை?

பாஜகவிற்கு எதிராக நிற்க பிடிபியை அழைத்தும் அவர்கள் வரவில்லை. பழைய விவகாரங்களை மனதில் வைத்துக்கொண்டு எங்களை வசைபாடத்தொடங்கியது. மெக்பூபா முஹ்தியின் மகள் , என்சி கட்சியை, கடுமையான விமர்சித்தார். முன்னாள் பிரதமரான ஷேக் அப்துல்லாவையும் விட்டு வைக்காமல் வசைபாடினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் எங்களது கட்சியை நம்புகிறார்கள். நேற்றையைவிட இன்று வலு கொண்டவர்களாகவே இருக்கிறோம். குப்கார் தீர்மான மக்கள் கூட்டணி இருந்தாலும், அக்கூட்டணி இல்லையென்றாலும் என்சி மக்கள் பிரச்னைகளுக்காக என்றும் முன்நிற்கும்.

தேர்தல் எப்படி நடைபெறுகிறது?
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் முக்கியமான தேர்தல். சட்டசபைக்கு தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்றதைப் பற்றிய முடிவை மக்கள் ஒன்றிய அரசுக்கு தெரிவிப்பார்கள் என நம்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மக்கள் ஏற்காத முடிவை, அரசு எங்கள் மீது திணித்தது. தங்களுக்கு ஆதரவான போலி கட்சிகளை தேர்தலில் நிற்க வைத்து வாக்குகளை பெற முயல்கிறது பாஜக. எனவே அந்தக் கட்சியின் திட்டங்களை உடைக்க மக்கள் முன்வருகிறார்கள் என நினைக்கிறேன்.

மக்களவை உறுப்பினரான எஞ்சினியர் ரஷீத்தை டெல்லி ஏஜண்ட் என கூறுகிறார்களே?

அவர் பாஜகவை எதிர்த்து தேர்தலில் நிற்பார் என நினைத்தேன். ஆனால், அவர் ஜம்மு காஷ்மீர் மக்களை, மாநிலத்தை ஆண்ட தலைவர்களை விமர்சித்து தாக்கிப் பேசிவருகிறார். இத்தகைய மொழியை பாஜகவை நோக்கி பேசவில்லை. மாநிலத்திலுள்ள பிற கட்சிகளை, மக்களை எதிர்த்துப் பேசுவதைக் காட்டிலும் பாஜகவை குறைவாகவே தாக்கிப் பேசியுள்ளார். ரஷீத், வாக்குகளை எந்தளவுக்கு பிரிக்கலாம் என்று யோசித்து செயல்பட்டு வருகிறார்.  

சிறையில் ஐந்து ஆண்டுகள் இருந்திருக்கிறார். அந்நிலையில் ஓமர் அப்துல்லாவை வென்றதாக கூறியிருக்கிறாரே?

அவர் சிறையில் இருந்தபோது, அவரின் பிள்ளைகள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கூறி மக்களவை தேர்தலில் வாக்கு சேகரித்தனர். ஆனால் இறுதியாக வென்றாலும் சிறையில் இருந்து வெளியே வரமுடிவில்லை. தேர்தலை உணர்ச்சிகரமான களமாக்கி வென்றார். இறுதியாக தேர்தலுக்காக இருபது நாட்கள் பிணையில் வெளியே வந்தார். அதனால் என்ன பயன் கிடைத்தது. ஒரு பயனும் இல்லை. நேர்மையாக சொன்னால் அவர் என்சியை விட பாஜகவையே தாக்கி பேசவேண்டும்.

சுபோத் கில்டியால்
டிஓஐ
aga syed ruhullah mehdi

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்