விழிப்புணர்வோடு உரையாடலுக்கான மொழியைத் தேர்ந்தெடுத்து பேச கற்க வேண்டும்

 

 

 

 





 

 

 

 

We are dangerous when
we are not conscious of
our responsibility for
how we behave, think,
and feel.non violent communication

பிறரிடம் பழகும்விதம், சிந்திப்பது, உணர்வது ஆகியவற்றில் விழிப்புணர்வு இல்லாத நிலையில், அபாயகரமானவர்களாக மாறுகிறோம்.

We can replace language
that implies lack of choice
with language that
acknowledges choice.-non violent communication

வாய்ப்புகள் பற்றாக்குறையாக உள்ள மொழியைத் தேர்ந்தெடுப்பதை விடுத்து, வாய்ப்புகளைக் கொண்ட மொழியைத் தேர்ந்தெடுக்கவேண்டும்

Our language obscures
awareness of personal
responsibility.-non violent communication

தனிப்பட்ட பொறுப்புணர்வைக் கொண்ட அதை வெளிக்காட்டும் உரையாடல் மொழியைப் பேச பழக வேண்டும்

நவீன காலத்தில் உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டால் வருகிற நேரடி பதில் போல யாரும் எந்த பதில்களையும் கூறுவதில்லை. தாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் கூட அதை ஏற்று பதில் கூற மறுக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவரது பள்ளிக்கு மாணவர்கள் குறைவாகவே வருகிறார்கள். அவர்களை அவராகவே இருசக்கர வாகனத்தில் சென்று கூட்டி வருகிறார். இப்படி செய்வதால், அவருக்கு பிள்ளைகள் கல்வி கற்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கவேண்டும் என்று கூறவேண்டியதில்லை. தன்னுடைய வேலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் கூட மனதில் இருக்கலாம். ஆனால், அவர் யோசிப்பது செயல்படுவது, சிந்திப்பது என அனைத்திலும் விழிப்புணர்வோடு இருந்தால், பள்ளி மாணவர்களுக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும். அவரின் நோக்கம் பற்றி நேரடியாக கேள்வி கேட்டால், கல்வி அறிவு, உலக நன்மை என சர்வதேச தர பதில் ஏதோவொன்று வரும். அதை பதிவு செய்தால், வதந்தியின் ஏஞ்சல் இணைப்பிதழில் கட்டுரையாக போட்டுவிடலாம்.

உரையாடல் என்பதில் கோரிக்கைகளை முன்வைப்பது, அதிகாரத்தை பயன்படுத்தி அச்சுறுத்துவது ஆகியவை இருந்தால், அந்த தொடர்பு வெகு நாளைக்கு நீடிக்காது. உரையாடலாகவும் இருக்காது. அரசின் அதிகாரத்தில் உள்ளவர், தொழில் முனைவோரை எளிதாக அச்சுறுத்தி பணிய வைக்கமுடியும். பல்லாண்டுகளாக நடக்கும் இந்த விவகாரத்தை நமது நாட்டில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். சிலர் மறைவாக செய்வார்கள். சிலர் வெளிப்படையாக, முன்பு நடக்கவில்லை என்றால் இனிமேல் நடக்க கூடாதா என பகிரங்கமாகவே செய்கிறார்கள். முதலில் நாளிதழில் கட்டுரையாக இருந்தது. இப்போது வீடியோவாக, ஆடியோவாக மாறியுள்ளது.

ஆசிரியராக, பெற்றோராக, அரசு அதிகாரியாக இருந்தாலும் தனது அதிகாரத்தை தகவல் தொடர்பு வழியில் பயன்படுத்தி மாணவனை, பிள்ளையை, மக்களை எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கலாம் என நினைப்பது தவறு. அது இயல்பான உரையாடல் உருவாவதை உருக்குலைத்துவிடும். இவர்கள் இதற்கு தகுதியானவர்கள், தகுதியில்லை என பாகுபாடாக சிந்திப்பதே, மக்களிடையே பேசுவதை, உரையாடுவதை தடுக்கும் அம்சமாக மாறிவிடும். அவனுக்கு இந்த தண்டனை கிடைக்கவேண்டியதுதான் பாவி என கூறுவதைக் கேட்டிருப்போம். மோசமானவர்களுக்கு இப்படியான தண்டனை கிடைக்கவேண்டியதுதான் என பலரும் யோசிப்பார்கள். வல்லுறவு குற்றங்களுக்கு மரணதண்டனை என அரசு அறிவிக்கிறது. இதில் சற்று குறைந்த குற்றங்களுக்கு சிறை தண்டனை என்றால், அத்தவறை செய்தவர் தண்டனை பெற்று திருந்தி வர வாய்ப்புள்ளது. அப்படி அவர் திருந்தி சமூகத்திற்குள் வந்தால் அதை வரவேற்கலாம். மரணதண்டனைக்கு உள்ளானவரை விட்டுவிடுவோம். அரசின் தண்டனையால், மரண தண்டனைக் கையின் ஜீவாத்மா, பரமாத்மாவாக மாற வழி கிடைக்கிறது.

நாம் பேசக்கூடிய மொழியை வைத்து பிறர் நம்மீது முத்திரைகளை, ஒப்பீடுகளை, கருத்துகளை, முடிவுகளை வைக்கிறார்கள். இதில், நாம் என்ன உணர்கிறோம், தேவை என்ன என்பது முற்றாக புறக்கணிக்கப்படுகிறது. இந்தப் பார்வை சில இனக்குழுக்களை பல நூற்றாண்டுகளாக பாதித்து வேட்டையாடி வந்துள்ளது. வெளியே உள்ள எதிரிகளை விட தவறான கருத்துகளைக் கொண்ட மனமே ஆபத்தானது. அதை சீர் செய்ய முறையான கல்வி தேவைப்படுகிறது. அக்கல்வி மூலமே நமது மனதில் உள்ள முறையற்ற இயல்பை, ஆசைகளை கட்டுப்படுத்த முடியும். தவறான பாதையில் இருந்து மனதை மாற்றிக்கொள்ள முடியும்.

இனக்குழு மேலாதிக்கம் கொண்ட, சாதிப்படிநிலை கொண்ட சமூக கட்டமைப்பில் உரையாடல் என்பதே கடினமானதாக இருக்கும். இங்கு பெரும்பகுதி மக்களை, சுயநலனை நோக்கமாக கொண்ட சொற்ப மனிதர்கள் கட்டுப்படுத்தி ஆண்டு வருவார்கள். சர்வாதிகாரத்திற்கு மக்கள் கட்டுப்பட நல்லது, கெட்டது என கருப்பு வெள்ளையான கருத்துகளை இனக்குழுவினர், மேலாதிக்க மனிதர்கள் உருவாக்குகிறார்கள். உண்மையில் இதிலிருந்து வெளியே வந்தால்தான் ஒருவருக்கு தான் செய்யும் செயல், தனக்கு இழைக்கப்படுவதை பகுத்தாய்வு செய்து பார்க்க முடியும். அந்த நிலையில் மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு, சமூகத்திற்கு, அரசுக்கு அடிமையாக, அடியாட்களாக இருக்கும் அவசியமற்றுப் போய்விடுகிறது.

மூலநூல் நான் வயலன்ட் கம்யூனிகேஷன்

வின்சென்ட் காபோ

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்