சீனமொழி பேசுவதற்கான இலவச நூல் - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை கொண்டது!

 

 

 


 

 

இனிய நண்பர்களுக்கு வணக்கம்

முன்னாள் விகடன் மாணவப் பத்திரிகையாளரான பயணிதரன் எழுதியுள்ள இலவச நூல் இது. இந்த நூலை அவரது பயணி என்ற வலைத்தளத்தில் சென்று தரவிறக்கிக் கொண்டு படிக்கலாம். வலைத்தளத்தில் சந்தாதாரராக இணைந்தால் நூலை இலவசமாக அளிக்கிறேன் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். வலைத்தளத்தை விளம்பரப்படுத்த சிறந்த யோசனை. ஆனால், நூலை உடனே தரவிறக்க முடியவில்லை. வலைத்தளத்தில் இணைந்து ஏறத்தாழ சில மாதங்கள் கழித்து மின்னஞ்சலில் நூலை அனுப்பி வைத்தார். அனேகமாக அறிவிப்பை வெளியிட்டுவிட்டு நூலை எழுதிக் கொண்டிருந்திருக்கக்கூடும்.

கிரியேட்டிவ் காமன் உரிமையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நூலை பிறருக்கும் நீங்கள் பகிர்ந்து வாசிக்கலாம்.


 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்