பரஸ்பர வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க நாடுகளோடு இணைந்து நடைபோடும் சீனா - மக்கள் சீன குடியரசு 75 ஆண்டுகள்

 

 




 

மக்கள் சீன குடியரசு - 75 ஆண்டுகள்

உலக நாடுகள் சிறப்பாக இயங்கினால்தான் சீனா நன்றாக செயல்பட முடியும். சீனா நன்றாக செயல்படும்போது, முழு உலகமும் இன்னும் மேம்படும் என 2023ஆம் ஆண்டு சீன அதிபர் ஷி ச்சின்பிங், மூன்றாவது பாதை மற்றும் சாலை திட்டத்தின் உரையில் கூறினார். சீனாவில் 1.4 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களோடு, பல்வேறு சவால்களை சந்தித்து பயணிப்பது சாதாரண காரியமல்ல. 2049ஆம் ஆண்டு சீன நாட்டை புத்துயிர்ப்பு செய்வதுதான் லட்சியமாக கொண்டு சீன அரசு இயங்கி வருகிறது. அந்த ஆண்டில் மக்கள் சீன குடியரசு, தனது நூற்றாண்டைக் கொண்டாடும் நாள்.

மக்கள் சீன குடியரசு நிலப்பரப்பு ரீதியாக, மக்கள்தொகை ரீதியாக பெரிய நாடு. இப்படி பல்வேறு சவால்களைக் கொண்ட நாடு எப்படி ஒரே திசையில் பயணிக்கிறது என ஆச்சரியமாக உள்ளது. 1978ஆம் ஆண்டு சீனாவில் நடந்த பொருளாதார மாற்றங்கள், சீர்திருத்தங்கள் முக்கியமான சாதனைகள் என்று கூறவேண்டு்ம். அவை அனைத்து பிரிவு மக்களுக்கும் வளமை சேர்ப்பதாக மாறியுள்ளது. இதன் கூடவே கிராம, நகர வளர்ச்சி போதாமைகள், காற்று, நீர் மாசுபாடு, கோவிட், ரஷ்யா உக்ரைன் போர்  ஆகிய சவால்களையும் நாடு எதிர்கொண்டுள்ளது. சீனாவின் வளர்ச்சி பிற நாடுகளோடு சண்டையிட்டு ஏற்பட்டதல்ல. பொருளாதார ரீதியாக சீனா வளர்ந்து மேம்பாடு அடைவது உலக நாடுகளின் சமநிலைக்கு உதவுகிறது.

ஆப்கானிஸ்தானின சமூக பொருளாதார நிலையை அறியாமல், அலட்சியமாக நாட்டோ படைகள் போரை நடத்தின. இதுபற்றி சீனா முன்பே எச்சரித்தது. ஆனால், அதை அமெரிக்கா வழிநடத்திய நாட்டோ படைகள் புறக்கணித்தன. இன்று, அங்கு சமூக, பொருளாதார, கலாசார பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் சீனாவில் நடைபெற்ற சீனா - ஆப்பிரிக்கா மாநாடு பரஸ்பர நலன்களை அடிப்படையாக கொண்டது. இதில், வளர்ச்சி நன்மை என இருதரப்பிலும் நன்மைகள் நடைபெறும். இந்த வகையில் பொருளாதார ஒத்துழைப்போடு, கலாசார பகிர்தலும் நடைபெற்றுள்ளது. அமைதி, பாதுகாப்பை இப்படியான வழிகளில்தான் பெற முயலவேண்டும்.

சீனா பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது. மேலும் மேம்பாடு அடையும் திசையில் நடைபோட்டு வருகிறது. அந்நாட்டின் எதிர்காலம் என்பது பிற நாடுகளின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள். இதுபோன்ற செயல்பாடுகளின் விளைவுகளாக பொருளாதார மேம்பாடு மட்டும் அல்ல அமைதியும், சமநிலையும் உள்ளன. நீங்கள் வேகமாக செல்லவேண்டுமா தனியாக செல்லுங்கள். நீண்ட தொலைவுக்கு செல்லவேண்டுமா துணையுடன் நடந்துசெல்லுங்கள் என்ற ஆப்பிரிக்காவின் பழமொழியை ஷி ச்சின்பிங் ஒருமுறை கூறினார். அது இந்த தருணத்தில் சரியான பழமொழியாகவே தோன்றுகிறது.

சீனா டெய்லி - ஹூசைன் அஸ்கரி
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்