தான்சானியாவில் நிலவிய ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க உதவிய சீன வேளாண்மை உத்திகள்!

 

 

 


சீனா  - ஆப்பிரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தால் வலிமை பெறும் பெண்கள், குழந்தைகள்!
ஆப்பிரிக்காவின் ஜாம்பியா, டான்சானியா, மலாவி ஆகிய நாடுகளில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 2023ஆம் ஆண்டு செய்த ஆய்வில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முப்பது சதவீதம் பேர் ஊட்டச்சத்து இன்றி வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
மேற்கு நாடுகள் ஆப்பிரிக்காவிற்கு உதவி செய்கிறோம் என வெற்றுப்பேச்சு பேசி வந்த நிலையில் சீனா செய்த உதவியால், ஆப்பிரிக்க நாடுகள் மெல்ல வளர்ச்சியை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளன. இதற்கான முதல்கட்டமாக 2019ஆம் ஆண்டு, சீனாவும், ஆப்பிரிக்க நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தன. இதன்படி சீன வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை சாந்த முறைகளை, தொழில்நுட்பத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கி வருகிறது. ஆப்பிரிக்க மாணவர்கள் சீனாவுக்கு வந்து புதிய வேளாண்மை முறைகளை வீரிய பயிர்களைப் பற்றி பயிலத் தொடங்கியுள்ளனர். இந்த மாணவர்களின் எழுச்சியால், ஆப்பிரிக்க நாடுகளான மலாவி, தான்சானியாவில் சோளம், சோயாபீன் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மலாவி, வேளாண்மையை பொருளாதார அடிப்படையாக கொண்ட நாடு.
தான்சானியாவில் சீன வேளாண்மை பல்கலைக்கழகம் சோயாபீன்ஸ்களை பயிரிடும் திட்டத்தை தொடங்கியது. சிறிய பீன்ஸ், அதிக ஊட்டச்சத்து என்பது திட்டத்தின் பெயர். இதில் கிடைக்கும் சோயாபீன்ஸ்களை பெண்கள், குழந்தைகளுக்கு வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே நோக்கம். சோளத்தை அதிகளவு தான்சானியாவில் உணவாக உண்கிறார்கள். ஆனால், அதில் எதிர்பார்த்த ஊட்டச்சத்துகள் கிடைக்கவில்லை. புரதம், வைட்டமின்கள் அதிகம் நிறைந்த சோயாபன்களை பயிரிடத் தொடங்கி உணவுமுறையில் அப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கி வருகிறார்கள். சோயா பாலையும் தயாரிக்கத் தொடங்கும் நிறுவனங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. மொரோகோரோ கிராமத்தினருக்கு, சோயாபீன்ஸ் முக்கியமான வாழ்வாதாரப் பயிராக மாறியுள்ளது.

சீனாவில் ஆப்பிரிக்க மாணவர்களுக்கு முதலாண்டில் வேளாண்மை கொள்கை, நடைமுறை பயிரிடுதல் முறைகளை கற்றுத்தருகிறார்கள். இரண்டாம் ஆண்டில், வேளாண்மை முறைகளை ஆப்பிரிக்காவில் செயல்படுத்துவதைக் கூறுகிறார்கள் இறுதி ஆண்டில், ஆராய்ச்சி, கட்டுரைகளை எழுதி சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டப்படி, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 91 மாணவர்கள் வேளாண்மை முறைகளை சீனாவில் கற்றுள்ளனர். 36பேர் தங்களது நாடுகளுக்கு திரும்பி, வேளாண்மை முறைகளை செயல்படுத்தி விளைபொருட்களை உருவாக்கி வருகிறார்கள்.

சீனாவில் தொழில்நுட்ப உதவியால், ஆப்பிரிக்க நாடுகள் வேளாண்மைத் துறையில் சாதிப்பதோடு, அவர்களின் வருமானமும் பெருகிவருகிறது.

சீனா டெய்லி
தமிழாக்கம் தீரன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்